Ellarum Paithiyam thann Lyrics
எல்லாரும் பைத்தியந்தான் பாடல் வரிகள்
Last Updated: Apr 01, 2023
எல்லாரும் பைத்தியந்தான் என்னாச்சு வைத்தியம் தான்

எவன்டா படச்சான் அட அவனுக்கும் பைத்தியம்தான்
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன் யார் கேட்பது..
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன் யார் கேட்பது

ஊ....ஊசிக்கு காதிருக்கு ஆனாலும் கேட்காது
தேங்காய்க்கு கண்ணிருக்கு ஆனாலும் பாக்காது
சீப்புக்கு பல்லிருக்கு ஆனாலும் கடிக்காது
சில பேர்க்கு இதையெல்லாம் நான் சொன்னா புடிக்காது
உலகே மாயம் வாழ்வே மாயம் நான் பார்க்கிறேன்
இதைத்தான் நெனச்சேன் என் மனசுக்குள் சிரிச்சுக்கிறேன்
எனக்கா கிறுக்கு இதத்தான் விளக்கு நான் கேட்கிறேன்
எனக்கா கிறுக்கு இதத்தான் விளக்கு நான் கேட்கிறேன்
எல்லாரும் பைத்தியந்தான் என்னாச்சு வைத்தியம் தான்
எவன்டா படச்சான் அட அவனுக்கும் பைத்தியம்தான்
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன் யார் கேட்பது..
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன் யார் கேட்பது
அறிவில்தான் கோளாறு இல்லாத ஆளாரு
தெரிஞ்சா நீ பதில் கூறு தெரியாட்டி வெளியேறு
பதினெட்டு சித்தருதான் இதையெல்லாம் சொன்னாரு
அதனால்தான் நம்மோடு ஒட்டாமல் நின்னாரு
அதுபோல் ஒதுங்கி தனியா பதுங்கி நான் வாழ்கிறேன்
சரிதான் போய்யா இந்த உலகத்த புரிஞ்சுக்கிட்டேன்
எதுவோ ராகம் எதுவோ தாளம் நான் பாடுறேன்
சரிச சரிச பதப பதப சரிகமப...லலலல..லாலாலா..
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன் யார் கேட்பது..
ஆஹ்ஹ்ஹா அஹ்ஹஹா
ஆஹ்ஹ்ஹா அஹ்ஹஹா
உஹ்ஹ்ஹூ உஹ்ஹ்ஹூ..ஊஊஊஊஹ்
.
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.