நதியா நதியா நைல் நதியா பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Poo Mazhai Pozhiyuthu (1987) (பூமழை பொழியுது)
Music
R. D. Burman
Year
1987
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Vaali

ஆண் : ஹோ ஹோ ஹோஹோ...
நதியா நதியா நைல் நதியா
நதி போல் நெளியும் நடையா
இடைதான் கொடியா கொடி மேல் கனியா
கொண்டாட நான் இல்லையா

பெண் : நதியா நதியா நைல் நதியா
நதி போல் நெளியும் நடையா
இடைதான் கொடியா கொடி மேல் கனியா
கொண்டாட நீயில்லையா
பெண் : ஹோ...ஹோ...ஹோ...
ஆண் : ஹோ ஹோ ஹோ

ஆண் : ஒரு பூமழைதான் இங்கு பொழியுது
பார் நீ புன்னகை புரிகையிலே
தேன் மழைதான் கண்ணில் வழியுது பார்
நீ தரிசனம் தருகையிலே

பெண் : மழை தூரலிலும் பனி சாரலிலும்
உடல் குளிர் கொண்டு தவிப்பதென்ன
கண்படவும் நீ கை தொடவும்
அந்த குளிர் விட்டு போவதென்ன

ஆண் : ராத்திரியில் நம் ராஜ்யத்தில்
ஓர் நீரோடை பாய்வதென்ன..
பெண் : அதுதான் அதுதான்
உனக்கும் எனக்கும் கொண்டாட்டம் கும்மாளம்...

ஆண் : நதியா நதியா நைல் நதியா
நதி போல் நெளியும் நடையா
பெண் : இடைதான் கொடியா கொடி மேல் கனியா
ஆண் : கொண்டாட நான் இல்லையா
ஆண் : ஹா ...ஹா ...ஹ..ஹா....
பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : டா டா டா டா … டா டா டா டா …

பெண் : ஒரு ஏடிருக்கு கதை எழுதி வைத்து
நீ இரவினில் படிப்பதற்கு
ஏங்குதையா சிறு தாமரை பூ
நீ தேனள்ளி குடிப்பதற்கு

ஆண் : சிறு பூவிருக்கு இளங்குருவி வந்து
மழை காலத்தில் படுப்பதற்கு
பாலிருக்கு மலை பழமிருக்கு
கொண்ட பசியினை தணிப்பதற்கு

பெண் : கால் தொடங்கி மலர் கூந்தல் வரை
உன் கை வண்ணம் கண்டாலென்ன
ஆண் : மெதுவா மெதுவா ...வரவா வரவா
ஒண்ணோடு ஒண்ணாக

பெண் : நதியா நதியா நைல் நதியா
நதி போல் நெளியும் நடையா
இடைதான் கொடியா கொடி மேல் கனியா
கொண்டாட நீயில்லையா

ஆண் : நதியா நதியா நைல் நதியா
நதி போல் நெளியும் நடையா ...
இடைதான் கொடியா கொடி மேல் கனியா
கொண்டாட நான் இல்லையா

ஆண் : ஹே ஹே ஹேய்ய்ய்
பெண் : ஹோஹோஹோ
ஆண் : ஆஹா ஹா ஹா
பெண் : ஓஓஓ ஹோ ஹோ ஓஓஓ

ஆண் : டா.. ராரா.. ரு.. து.. து.. ரு
பெண் : ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ
ஆண் : ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ
பெண் : ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.