மாரி மழை பெய்யாதோ பாடல் வரிகள்

Movie Name
Uzhavan (1993) (உழவன்)
Music
A. R. Rahman
Year
1993
Singers
G. V. Prakash Kumar, Shahul Hameed, Sujatha Mohan
Lyrics
Vaali
மாரி மழை பெய்யாதோ மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற

மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும் வானம் கருக்கலையே
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும் சோலைதான் இங்கில்லையே

மாரி மழை பெய்யாதோ மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற

சட்டியில மாக்கரச்சு சந்தியில கோலமிட்டு
கோலம் அழியும் வரை கோடை மழை பெய்யாதோ

மானத்து ராசாவே மழை விரும்பும் புண்ணியரே
சன்னல் ஒழுவாதோ சாரல் மழை பெய்யாதோ

வடக்கே மழை பெய்ய வரும் கிழக்கே வெள்ளம்
கொளத்தாங் கரையிலே அயிரை துள்ளும்

கிழக்கே மழை பெய்ய கிணறெல்லாம் புது வெள்ளம்
பச்சை வயக்காடு நெஞ்சை கிள்ளும்

நல்ல நெல்லு கதிரறுத்து புள்ள நெளி நெலியா கட்டு கட்டி
அவ கட்டு கட்டி போகையிலே
நின்னு கண்ணடிப்பான் அத்தை மகன்

உழவன் சிரிக்கணும் உலகம் செழிக்கனும்
மின்னல் இங்கு பட படக்க

மாரி மழை பெய்யாதோ மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற

வரப்புல பொண்ணிருக்கு பொண்ணு கையில் கிளி இருக்கு
கிளி இருக்கும் கையா நீ எப்போ புடிப்பா

வெதை எல்லாம் செடியாகி செடியெல்லாம் காயாகி
காய வித்து உன் கையா புடிப்பேன்

புது தண்டட்டி போட்ட புள்ள சும்மா தலதலன்னு வளந்த புள்ள
ராத்தவலையெல்லாம் குலவை இட நான் தாமரை உன் மடி மேல

கனவுகள் பலிக்கணும் கழனியும் செழிக்கனும் வானம் கரு கருக்க

மாரி மழை பெய்யாதோ மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.