இஞ்சி இடுப்பழகி பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Devar Magan (1994) (தேவர் மகன்)
Music
Ilaiyaraaja
Year
1994
Singers
Kamal Haasan, Minmini, S. Janaki
Lyrics
Vaali
ஆண்:
இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா ..

இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே ஏ...ய்..
(இசை)

பெண்: தன்னந் தனிச்சிருக்க தத்தளிச்சு தானிருக்க
உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே
ஆண்: புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்
பெண்: உன் கழுத்தில் மாலையிட ஒண்ணிரண்டு தோளைத் தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா
ஆண்: வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே
உள்ளம் மட்டும் உன் வழியே நானே

பெண்: இஞ்சி இடுப்பழகா மஞ்ச சிவப்பழகா
கள்ளச் சிரிப்பழகா
மறக்க மனம் கூடுதில்லையே

ஆண்: இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே

பெண்:அடிக்கிற காத்தைக் கேளு அசையற நாத்தைக் கேளு
நடக்கிற ஆத்தைக் கேளு நீ தானா …

ஆண்: இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே ஆ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.