தாயா தாரமா கேள்வி ஆகுமா பாடல் வரிகள்

Movie Name
Thaaya Thaarama (1989) (தாயா தாரமா)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
தாயா தாரமா கேள்வி ஆகுமா
கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா
தாயா தாரமா கேள்வி ஆகுமா
கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா

தாய் வேறு தாரம் வேறு பெண்கள் தானடா
ஆனாலும் ரெண்டும் ரெண்டு கண்கள் தானடா
தாயா தாரமா கேள்வி ஆகுமா
கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா

தாலிக் கட்டிக் கொண்டவ தாரமென்று வந்தவ
தக்க துணையாவாளே எந்நாளும் தான்
கொண்டவனைக் காப்பவ குற்றம் குறை தீர்ப்பவ
இல்லறத்தின் ஆதாரம் சம்சாரம் தான்

கை நிறைய சோறிடுவாள் கண்ணுறங்க பாயிடுவாள்
நாயகனின் பேர் விளங்க நல்ல பிள்ளை ஈன்றிடுவாள்
சம்சாரம் இல்லையேல் சந்தோஷம் ஏதடா
சன்யாசி தானடா...

தாயா தாரமா கேள்வி ஆகுமா
கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா..

பிள்ளை வரம் கேட்டவ பெத்தெடுத்து போட்டவ
தொட்டிலிட்டு தாலாட்டி பாலூட்டினாள்
எத்தனையோ ராத்திரி பட்டப்பகல் மாதிரி
கண் முழிச்சி நாள்தோறும் ஆளாக்கினாள்

பச்சப்பிள்ளை வாலிபனாய் ஆன பின்னும் காத்திடுவா
உச்சி முதல் கால் வரைக்கும் எண்ண வச்சு தேச்சிடுவா
அம்மாவைப் பாரடா அவளாட்டம் யாரடா
அறிஞ்சா நீ கூறடா...

தாயா தாரமா கேள்வி ஆகுமா
கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா
தாய் வேறு தாரம் வேறு பெண்கள் தானடா
ஆனாலும் ரெண்டும் ரெண்டு கண்கள் தானடா
தாயா தாரமா கேள்வி ஆகுமா
கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.