மனைவி ஒரு மந்திரி பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
Manaivi Oru Manthiri (1988) (மனைவி ஒரு மந்திரி)
Music
Shankar-Ganesh
Year
1988
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
பொம்பளை இட்டது சட்டம் போடுவா ஆயிரம் திட்டம்
மஞ்சளில் தாலியைக் கட்டும்
மன்னவன் சின்னவன் எல்லாருக்கும்

மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி

பூ முடிச்ச செந்தாமரை பொட்டு வெச்ச மூணாம்பிற
பொண்ணு இல்லறத்தின் கண்ணு
தொட்டதெல்லாம் பொன்னாகலாம்
நட்டதெல்லாம் பூவாகலாம் ராசி மஞ்சள் முகராசி

பாட்டுக்கொரு பாரதியும்
பாடி வெச்சான் பெண்மையத்தான்
பாட்டில் அவன் சொன்னதெல்லாம்
பொய்கள் அல்ல உண்மையத்தான்

பூசல் தீரவே நல்ல புத்தி கூறுவா
வாசல் தேடியே வந்து வாழ்த்து பாடுவா
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி

ஈரமுண்டு நெஞ்சோடுதான் வீரமுண்டு கண்ணோடுதான்
தேசம் தாய்க்குலத்த பேசும்
காதலிலே மாதவிதான் கற்பினிலே கண்ணகிதான்
நாணம் பொண்ணு விடும் பாணம்

கொண்டவளும் ஆசையிலே கூறுகின்ற மந்திரந்தான்
கேட்டவுடன் ஆண் மகனும் ஆடுகின்ற எந்திரம் தான்
மாமன் தேடிடும் பெஞ்சாதி ஆனவ
சாமி மேனியில் சரி பாதியானவ

மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.