நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் பாடல் வரிகள்

Last Updated: Feb 03, 2023

Movie Name
Nootrukku Nooru (1971) (நூற்றுக்கு நூறு)
Music
V. Kumar
Year
1971
Singers
P. Susheela
Lyrics
Vaali
பன்னிரண்டு மணியளவில் குளிர்ப் பனி விழும் நள்ளிரவில்
கண்ணிரண்டில் மலர்ந்திட இன்பக் கனவுகள் வர வேண்டும்
ஹேப்பி……………. நியூ …………இயர்…………………

நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
நீ வர வேண்டும்,
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்
நீ வர வேண்டும்,
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
நீ வர வேண்டும்,
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்
நீ வர வேண்டும்,
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே

நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்

நீ வர வேண்டும்,
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்
நீ வர வேண்டும்.....

மாதா கோவில் மணியோசை நம்மை

போற்றும் அருளோசை தேவா நீயும் வா..
உருகும் மெழுகில் ஒளி உண்டு ஒளியின்
நிழலில் உறவுண்டு உயிரே நெருங்கி வா,
வருங்காலம் பொன்னாக வாழ்நாளில் ஒன்றாக
எதிர்பார்க்கும் நேரத்தில்
எனைத்தேடி வாராயோ..
நெஞ்சே என்னிடம் நினைவோ உன்னிடம்
நெஞ்சே என்னிடம் நினைவோ உன்னிடம்
நெஞ்சே என்னிடம் நினைவோ உன்னிடம்..

உன்னை வாழ்த்தி பாடுகிறேன்

நீ வர வேண்டும்,
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்
நீ வர வேண்டும்..

இதயம் எனது காணிக்கை

இணைவோம் என்ற நம்பிக்கை
அழைத்தேன் ஓடி வா,
ஓடும் காலம் ஓடட்டும்
இளமை நின்று வாழட்டும்
அழகை தேடி வா,
உனக்காக பெண்ணுண்டு உறங்காத கண்ணுண்டு
தனக்காக வாழாமல் தவிக்கின்ற நெஞ்சுண்டு,
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்,
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்..
உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
நீ வர வேண்டும்,
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்
நீ வர வேண்டும்
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்

நீ வர வேண்டும்,
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்
நீ வர வேண்டும்.

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.