தேனே தென்பாண்டி பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Udaya Geetham (1985) (உதய கீதம்)
Music
Ilaiyaraaja
Year
1985
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே

தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை ஆரீராரோ
நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ

தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே
மானே இள மானே

மாலை வெயில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீ தான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே

பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே
பால் மணத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தல் வாசம் விட்டு போகுமா
ராஜா நீ தான் நான் எடுத்த முத்துப் பிள்ளை

தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை ஆரீராரோ
நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ

தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே
மானே இள மானே