மலரே மௌனமா பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Karna (1995) (கர்ணா)
Music
Vidyasagar
Year
1995
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Vaali
(இசை)
ஆண்: மலரே மௌனமா மௌனமே வேதமா
பெண்: மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
ஆண்: மலரே மௌனமா மௌனமே வேதமா
(இசை)

ஆண்: பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ ஆ...
பெண்: மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ
ஆண்: ஏதோ சுகம் உள்ளூறுதே
பெண்: ஏனோ மனம் தள்ளாடுதே
ஆண்: ஏதோ சுகம் உள்ளூறுதே
பெண்: ஏனோ மனம் தள்ளாடுதே
ஆண்: விரல்கள் தொடவா
பெண்: விருந்தைப் பெறவா?
ஆண்: மார்போடு கண்கள் மூடவா?

ஆண்: மலரே மௌனமா
பெண்: மலர்கள் பேசுமா?
(இசை)

பெண்: கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
ஆண்: காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
பெண்: காற்றே என்னை கிள்ளாதிரு
ஆண்: பூவே என்னை தள்ளாதிரு
பெண்: காற்றே என்னை கிள்ளாதிரு
ஆண்: பூவே என்னை தள்ளாதிரு
பெண்: உறவே உறவே
ஆண்: உயிரின் உயிரே
பெண்: புது வாழ்க்கை தந்த வள்ளலே

ஆண்: மலரே மௌனமா மௌனமே வேதமா?
பெண்: மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

ஆண்: மலரே
பெண்: ம்..
ஆண்: மௌனமா?
பெண்: ம்ம்..
ஆண்: மௌனமே
பெண்: ம்ம்ம்..
ஆண்: வேதமா?
பெண்: ஆ...அ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.