தீயில்லை புகையில்லை பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Engeyum Kaadhal (2011) (எங்கேயும் காதல்)
Music
Harris Jayaraj
Year
2011
Singers
Harris Jayaraj, Mukesh, Naresh Iyer, Vaali
Lyrics
Vaali
தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூவில்லை மடலில்லை
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்..
ஒ... ஹோ... விலையாய் தந்தேனே என்னை
ஒ... ஹோ... வாங்கிக் கொண்டேனே உன்னை
ஒ... ஹோ... ஆடை கொண்டதோ தென்னை
ஒ... ஹோ... ஒ.. ஹோ....

வெகு நாளாய் கேட்டேன்
விழித் தூறல் போட்டாய்
உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே ஒ.. ஒ...
விலகாத கையைத் தொட்டு
விழியோர மையைத் தொட்டு
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே
விலக்கிய கனியை விழுங்கியது
விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது
இது ஒரு சாட்சி போதாதா?
கண்கள் மோதாதா? காதல் ஓதாதா?

தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே

பூவில்லை மடலில்லை
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்...

ஒ.. ஒ... புனல் மேலே வீற்று
பனி வாடை காற்று
புனைந்தது நமக்கொரு புது பாட்டு


கடற்கரை நாரைக் கூட்டம்
கரைந்திங்கு ஊரை கூட்டும்
இருவரும் நகர்வலம் வர பார்த்து
சிலு சிலுவென்று குளிரடிக்க
தொடு தொடு என்று தளிர் துடிக்க
எனக்கொரு பார்வை நீதானே
என்னை எடுப்பாயா உன்னுள் ஒளிப்பாயா..

தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூவில்லை மடலில்லை
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்...

ஒ... ஹோ... விலையாய் தந்தேனே என்னை
ஒ... ஹோ... வாங்கி கொண்டேனே உன்னை
ஒ... ஹோ... ஆடை கொண்டதோ தென்னை

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.