செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம் பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Thangamani Rangamani (1989) (தங்கமணி ரங்கமணி)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
P. Jayachandran, K. S. Chitra
Lyrics
Vaali
ஆண் : செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம்
எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ

தொடு தொடுன்னு இள மலர் துடிக்க
கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க

பெண் : செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம்
எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ

தொடு தொடுன்னு இள மலர் துடிக்க
கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க

ஆண் : செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம்
எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
பெண் : பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ

ஆண் : கை விரல் நகங்கள் தீண்ட
இன்னும் கூச்சம் எதற்கு இது கூட்டல் கணக்கு
கை விரல் நகங்கள் தீண்ட
இன்னும் கூச்சம் எதற்கு இது கூட்டல் கணக்கு

பெண் : தென்றல்தான் நெருங்க தென்னைத்தான் குலுங்கும்
ஒன்றுதான் இருக்க ஒவ்வொன்றாய் விளங்கும்
ஆண் : உச்சி வேளை வெய்யில் போலே உஷ்ணம் ஏற
பெண் : உன்னை நானும் என்னை நீயும் பின்னும் நேரமோ

ஆண் : செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம்
எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
பெண் : பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ

பெண் : அந்தியில் அரும்பும் ஆசை
என்னைப் பாடாய் படுத்த பட்டுப் பாயும் உறுத்த
அந்தியில் அரும்பும் ஆசை
என்னைப் பாடாய் படுத்த பட்டுப் பாயும் உறுத்த

ஆண் : உன்னை நான் எடுப்பேன் ஒத்தடம் கொடுப்பேன்
ஒட்டு மாஞ்செடிப் போல் ஒட்டி நானிருப்பேன்
பெண் : அந்த தேதி அந்தி மாலை உன்னை சேர
ஆண் : அந்த நேரம் அர்த்தஜாமம் அன்பின் வெள்ளமோ

பெண் : செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம்
எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
ஆண் : பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ

பெண் : தொடு தொடுன்னு இள மலர் துடிக்க
ஆண் : கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க
இருவரும் : லாலாலலால்லா...லாலலலாலா....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.