அப்பனென்றும் அம்மையென்றும் பாடல் வரிகள்

Movie Name
Guna (1991) (குணா)
Music
Ilaiyaraaja
Year
1991
Singers
Ilaiyaraaja
Lyrics
Vaali
பல்லவி :-
----------------

அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு
அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு
ஞானப் பெண்ணே சக்கையாக போகும் கரும்பு
பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்

அப்பனென்றும்....
அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு

சரணம் 1
---------------

குத்தம் குறை ஏதும் அற்ற ஜீவன் இங்கு யாரடா
சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தானடா
சிவனைக் கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
புத்தி கெட்ட மூடர்கென்றும் ஞானப் பார்வை ஏதடா
ஆதி முதல் அந்தம் உன் சொந்தம்
உன் பந்தம் நீ உள்ளவரை தான்
வந்து வந்து கூடும் கூத்தாடும்
விட்டோடும் ஓர் சந்தை கடை தான்
இதில் நீ என்ன நான் என்ன
வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத் தள்ளு

பல்லவி :-
----------------
அப்பனென்றும்.......
அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு

சரணம் 2
----------------
கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரனும்
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனதாரடா
தட்டு கெட்டு ஓடும் தள்ளாடும்
எந்நாளும் உன் உள்ளக் குரங்கு
கட்டுப்படக் கூடும்எப்போதும்
நீ போடு மெய்ஞான விலங்கு
மனம் ஆடாமல் வாடாமல்
மெய்ஞானம் உண்டாக
அஞ்ஞானம் அற்று விழும்

பல்லவி :-
----------------
அப்பனென்றும்......
அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு
அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு
ஞானப் பெண்ணே சக்கையாக போகும் கரும்பு
பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்

அப்பனென்றும்.....
அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு
அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு
ஞானப் பெண்ணே சக்கையாக போகும் கரும்பு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.