சூரியனே இளம் பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Maanbumigu Maanavan (1996) (மாண்புமிகு மாணவன் )
Music
Deva
Year
1996
Singers
K. S. Chithra
Lyrics
Vaali
சூரியனே இளம் சூரியனே
உன்னை தேடுது பார் இந்த தாமரையே
எந்தன் வானகமே உயர் வானகமே
இங்கு வாடுது பார் உந்தன் வான்நிலவே நீ வா

காதலனே உனை காதலித்தேன்
உன் கண்ணசைந்தால் நான் கையனைப்பேன்
நீ வாய் திறந்தால் நான் வாழ்ந்திருப்பேன்
இல்லை தீக்குளித்து உயிர் நீத்திருப்பேன் நீ வா
உன் பேரை ஒவ்வொரு நாளும் வேதமென ஓதுகிறேன்
உன் மேலே காதலை வைக்க
பூமேலே மெத்தை விரித்தேன் பூவுடம்பு நோகிறதே
உன்னாலே தூக்கம் இழந்து
தினந்தோறும் புண்ணாகும் தேகம்
ஒருபோதும் விலகாது மோகம் வா

சூரியனே இளம் சூரியனே
உன்னை தேடுது பார் இந்த தாமரையே
எந்தன் வானகமே உயர் வானகமே
இங்கு வாடுது பார் உந்தன் வான்நிலவே நீ வா

சின்ன சின்ன இதழ் திண்ண திண்ண விழி மின்ன மின்ன வரும் அன்னம்
உன்னை மட்டும் உயிர் உள்ளமட்டும் தினம் உச்சரிக்கும் இவள் உள்ளம்
உன்னையன்றி ஒரு சொந்தமில்லை என என்னிடத்தில் மனம் சொல்லும்
உன்னை தொட்டு வரும் பெண்ணை கட்டு இல்லை என்னை விட்டு உயிர் செல்லும்
உன்னுயிராய் நான் இருப்பேன்
என்னுயிரே வந்துவிடு
உனக்காக தானே இந்த மானே
பூமியில் நான் பிறந்தேனே வா

ஆசை கொண்டு உந்தன் பொன்முகத்தை நெஞ்சில் அச்சடித்து வைத்த பாவை
உன்னை என்னை ஒரு சோறு தண்ணி இன்றி உள்ளம் வாடும் இந்த தோகை
வாழும் ஜென்மம் இது தீர்ந்த பின்னும் இன்னும் ஏழு ஜென்மம் வரக்கூடும்
வந்தபோதும் விட்டு நீங்கிடாது இந்த வண்ண மாது உறவாடும்
இன்னமும் ஏன் வாட்டுகின்றாய்
மனதினில் தீ மூட்டுகின்றாய்
நான் வரும் போது ஏனோ
வாசலை பூட்டுகின்றாய் வா

சூரியனே இளம் சூரியனே
உன்னை தேடுது பார் இந்த தாமரையே
எந்தன் வானகமே உயர் வானகமே
இங்கு வாடுது பார் உந்தன் வான்நிலவே நீ வா
உன் பேரை ஒவ்வொரு நாளும் வேதமென ஓதுகிறேன்
உன் மேலே காதலை வைக்க
பூமேலே மெத்தை விரித்தேன் பூவுடம்பு நோகிறதே
உன்னாலே தூக்கம் இழந்து
தினந்தோறும் புண்ணாகும் தேகம்
ஒருபோதும் விலகாது மோகம் வா வா… வா…

சூரியனே இளம் சூரியனே
உன்னை தேடுது பார் இந்த தாமரையே
எந்தன் வானகமே உயர் வானகமே
இங்கு வாடுது பார் உந்தன் வான்நிலவே நீ வா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.