டிசம்பர் மாதத்து பாடல் வரிகள்

Movie Name
Maanbumigu Maanavan (1996) (மாண்புமிகு மாணவன் )
Music
Deva
Year
1996
Singers
S. N. Surendar, Suja
Lyrics
Vaali
டிசம்பர் மாதத்து பனித்துளியே
நீ நவம்பரை தேடி வந்ததென்ன
டிசம்பர் மாதத்து பனித்துளியே
நீ நவம்பரை தேடி வந்ததென்ன
தேனே திணை தேனே இமைக்காமல் மலைத்தேனே
மானே உனைத்தானே தினம்தோறும் நினைத்தேனே
வந்த பின்னும் வெட்கம் வந்ததேனம்மா
வண்ண வண்ண சொர்க்கம் இங்கு தானம்மா

டிசம்பர் மாதத்து பனித்துளியே
நீ நவம்பரை தேடி வந்ததென்ன

மழை தூறிடும் நேரம் குடை பிடிக்க மறந்திட வேண்டும்
அந்த தூரலில் நானும் உனை நினைத்து நனைந்திட வேண்டும்

உந்தன் தோள்களில் சாய்ந்து எனை மறந்து தூங்கிட வேண்டும்
அந்த தூக்கத்தில் காணும் கனவுகளில் வாழ்ந்திட வேண்டும்

வண்ணம் மின்னும் கண்ணங்களில் முத்தம் சிந்த வேண்டும்
பித்தம் தரும் எண்ணங்களை ஒத்தி வைக்க வேண்டும்

சொல்லச்சொல்ல உள்ளம் கொஞ்சம் மாறாதா
மெல்ல மெல்ல கள்ளம் வந்து சேராதோ

டிசம்பர் மாதத்து பனித்துளியே
நீ நவம்பரை தேடி வந்ததென்ன

இது காமனின் நேரம் இரு மனது போர்க்களம் ஆகும்
வரும் மோகங்கள் யாவும் அணைத்தவுடன் காவலை மீறும்

தினம் ராத்திரி நேரம் உனைத்தழுவும் காற்றிடம் கேளு
அது எக்கத்தினாலே எனை மறந்து நான் விடும் மூச்சு

கண்ணுக்குள்ளே உன்னை வைத்து நெஞ்சுக்குள்ளே தைத்தேன்
சின்ன சின்ன வித்தைகளில் பங்கு கொள்ள வைத்தேன்

யுத்தம் இன்றி என்னை வென்ற மீனம்மா
சத்தம் இன்றி கைது செய்ததேனம்மா

தேனே திணை தேனே இமைக்காமல் மலைத்தேனே
மானே உனைத்தானே தினம்தோறும் நினைத்தேனே
வந்த பின்னும் வெட்கம் வந்ததேனம்மா
வண்ண வண்ண சொர்க்கம் இங்கு தானம்மா

டிசம்பர் மாதத்து பனித்துளியே
நீ நவம்பரை தேடி வந்ததென்ன

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.