கோடு போட்டா பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Maanbumigu Maanavan (1996) (மாண்புமிகு மாணவன் )
Music
Deva
Year
1996
Singers
Suresh Peters
Lyrics
Vaali
கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
வாழ்க்கை என்ன நீ வாழ்ந்து பாரு
வானம் பூமி உனை வாழ்த்தும் பாரு
வாழ்க்கை என்ன நீ வாழ்ந்து பாரு
வானம் பூமி உனை வாழ்த்தும் பாரு
ஹையோ ஹையோ அம்மா இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா

ஹையோ ஹையோ அம்மா திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா

கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு

காவலென்ன கேள்வியென்ன ஒரு கட்டுப்பாடு ஏதும் இல்ல
புயல் காற்றை யாரும் பூட்டி வைப்பதில்ல
அச்சம் இல்ல அடிமை இல்ல ஒரு ஆணைபோட யாரும் இல்ல
ரெண்டு கைகள் கட்டி நாங்கள் நிற்பதில்ல
ஒரு தப்பு தண்டா செய்பவரை நாங்கள் தப்பி செல்ல விடுவதில்ல
வெறும் உப்புக்கல்லை வைரம் என்று நாங்கள் ஒத்துக்கொள்ளும் ஜாதியில்ல
ஹையோ ஹையோ அம்மா இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா

ஹையோ ஹையோ அம்மா திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா

கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
கோ கோ கோடு போட்டா ரோடு போடு
பு பு புள்ளி வச்சா கோலம் போடு

காலை மாலை காணம் பாடி மணம் போல வாழும் வானம்பாடி
எங்க ராகம் தன்னில் சோகம் என்பதில்ல
நீலவானம் எங்கள் கூரை நடுவீதி யாவும் எங்கள் வீடு
இந்த ஆட்டம் பாட்டம் என்றும் ஓய்வதில்ல
நாங்க ஒரு தாய் பெற்ற பிள்ளைகளே எங்கும் ஒன்றாய் பறக்கும் பறவைகளே
நாங்க வாசம் வீசும் முல்லைகளே எங்க வாழ்வுக்கில்லை எல்லைகளே
ஹையோ ஹையோ அம்மா இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா

ஹையோ ஹையோ அம்மா திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா

கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
வாழ்க்கை என்ன நீ வாழ்ந்து பாரு
வானம் பூமி உனை வாழ்த்தும் பாரு
வாழ்க்கை என்ன நீ வாழ்ந்து பாரு
வானம் பூமி உனை வாழ்த்தும் பாரு
ஹையோ ஹையோ அம்மா இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா
ஹையோ ஹையோ அம்மா திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா

ஹையோ ஹையோ அம்மா இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா
ஹையோ ஹையோ அம்மா திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.