எ நாடோடிநாடோடி பாடல் வரிகள்

Last Updated: Jan 29, 2023

Movie Name
Anbe Vaa (1966) (அன்பே வா)
Music
M. S. Viswanathan
Year
1966
Singers
L. R. Eswari, P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Vaali
எ நாடோடி நாடோடி
போக வேண்டும் ஓடோடி
எ வாயாடி வாயாடி போக வைப்போம் போராடி
ஓ ஓ ஓ.... எ நாடோடி நாடோடி
போக வேண்டும் ஓடோடி
எ வாயாடி வாயாடி
போக வைப்போம் போராடி
ஓ ஓ ஓ....

வெச்சா குடுமி அடிச்ச மொட்டை
எல்லாம் எங்கள் கையிலே
பிடிச்ச பைத்தியம் முடிச்சா வைத்தியம்
எல்லாம் எங்கள் பையிலே
மந்திரவாதி தந்திரவாதி என்றவாதி என்ற ஜாதி
எங்களோடு போட்டி போட வா
நீ கால் மடக்கி கை மடக்கி மூச்சடிக்கி பேச்சடிக்கி
எந்களோடு ஆட்டம் ஆட வா


எ.. எந்த ஊர்
என்ன பேர்
எந்த காலேஜ்
என்ன க்ரூப்

ட்விஸ்ட் டான்ஸ் தெரியுமா
டெஸ்ட் மாட்ச் புரியுமா
ஆட்டம் ஆடி வழக்கமா
பாட்டு பாடி பழக்கமா
கவிஞனா ரசிகனா
கம்பனா கொம்பனா நீ
ஓ ஹோ ஹோ..

வாட் அ லக்கி டே
வாட் அ லக்கி டே
வாட் அ லக்கி டே
எ.. எ நாடோடி நாடோடி
போக வேண்டும் ஓடோடி
எ வாயாடி போக வைப்போம் போராடி
ஓ ஓ ஓ....

சிரிசசா சிரிப்போம்
மொறச்சா மோறப்போம்
எல்லாம் எங்கள் கண்ணிலே
நெனைச்சா நெனைப்போம்
மறந்தா மறப்போம் எல்லாம் எங்கள் நெஞ்சிலே
அட ராமன் என்ன பீமன் என்ன
கண்ணன் என்ன மன்னன் என்ன
பெண்களோடு போட்டி போட வா
தேன் இருக்கும் மொழி இருக்கும்
மீன் இருக்கும் விழி இருக்கும்
எங்களோடு ஆட்டம் ஆட வா
ஓ ஹோ ஹோ..

வாட் அ லக்கி டே
வாட் அ லக்கி டே
வாட் அ லக்கி டே

புலியை பார் நடையிலே
புயலை பார் செயலிலே
புரியும் பார் முடிவிலே
விரட்டினால் முடியுமா
மிரட்டினால் படியுமா
உலகில் உள்ள நாடுகளில்
என் கண்கள் படாத இடம் இல்லை
உங்களை போல கும்பலும் கூச்சலும்
பார்வையில் இதுவரை படவில்லை
ஓ ஹோ ஹோ..
புலியை பார் நடையிலே
புயலை பார் செயலிலே
புரியும் பார் முடிவிலே
விரட்டினால் முடியுமா
மிரட்டினால் படியுமா
உங்கள் ஊர் எந்த ஊர்
அந்த ஊர் எனது ஊர்
நான் யார் தெரியுமா
எடுத்து சொன்னால் புரியுமா
கண்ணெடுத்து பாருங்கள்
காதெடுத்து கேளூங்கள்
நல்லவருக்கு நல்லவன்
கெட்டவருக்கு கெட்டவன் நான்
ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்
ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்
டெஸ்ட் மாட்ச் வாருங்கள்
நானும் அன்று மாணவன்
நாலும் கற்று தெரிந்தவன்
பறவை போல் பறந்தவன்
கவலைகள் மறந்தவன் நான்
எ நாடோடி நாடோடி
போக வேண்டும் ஓடோடி
வெ வாயாடி போக வைப்பேன் போராடி
ஓ ஹோ ஹோ..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.