எங்கிருந்தோ ஆசைகள் பாடல் வரிகள்

Last Updated: Jan 29, 2023

Movie Name
Chandhrodhayam (1966) (சந்திரோதயம்)
Music
M. S. Viswanathan
Year
1966
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Vaali
எங்கிருந்தோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்
என்னென்று சொல்லத் தெரியாமலே
நான் ஏன் இன்று மாறினேன்

எங்கிருந்தோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்
என்னென்று சொல்லத் தெரியாமலே
நான் ஏன் இன்று மாறினேன்


ஆசை வரும் வயது.. உந்தன் வயது
பேசும் இளம் மனது.. எந்தன் மனது... (ஆசை)
ஆடவன் பார்வையில் ஆயிரம் இருக்கும்
மாதுளம் நாளொரு தூதுகள் அனுப்பும்
என்னென்ன சுகம் வருமோ...தேவி.......

எங்கிருந்தோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்
என்னென்று சொல்லத் தெரியாமலே
நான்தான் உன்னை மாற்றினேன்


மாலை வரும் மயக்கம்..என்ன மயக்கம்
காலை வரும் வரைக்கும் இல்லை உறக்கம்
பூவிதழ் மேலொரு பனித்துளி இருக்க
நான் அதைப் பார்க்கையில் நூலென இளைக்க
என்னென்ன அதிசயமோ....


சந்தித்ததோ பார்வைகள்
தித்தித்ததோ நினைவுகள்
மையலை சொல்லத் தெரியாமலே
ஏன் ஏன் இந்தக் கேள்விகள்ஆ....ஆஆஆ.. ஆ....ஆஆஆலாலாலாலாலாலாலா..லா..லா.
..ஒஹோ..ஹோ..ஹோ..ஹோஹோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.