மல்லிகை மாலை கட்டி பாடல் வரிகள்

Movie Name
Puthiya Raagam (1991) (புதிய இராகம்)
Music
Ilaiyaraaja
Year
1991
Singers
Ilaiyaraaja
Lyrics
Vaali

மல்லிகை மாலை கட்டி
மங்கல மேளம் கொட்டி
கட்டிய தாலிக்கில்லை தனி மரியாதை
பட்டதும் போதும் அம்மா
தொட்டதே பாவம் அம்மா
பெண்ணுக்கு தேவை இங்கே சுயமரியாதை

ஏன் நெஞ்சில் போராட்டம்
ஏன் கண்ணில் நீரோட்டம்
நீ பாடும் பூந்தோட்டம்
மல்லிகை மாலை கட்டி

குற்றங்கள் கற்பிக்கத் தானோ
கொண்டவன் கொண்டு வந்தானோ
உப்புக் கல்லை வைரம் என்று
நம்பி நடந்த பாவம்

மஞ்சள் தாலி பூ விலங்கா
காலில் போட்ட பொன் விலங்கா
பொல்லாத கணவன் பொருந்தாத ஒருவன்
பிழை செய்தான் இறைவன் ஹோ.....(மல்லிகை)

நாயகன் வாழ்கிற வீடு
நங்கைக்கு இங்கொரு காடு
இல்லறம் தான் நல்லறமாய்
தெய்வம் நினைத்தால் மாறும்

வாடைக் காலம் சென்றிடலாம்
வேனிற் காலம் வந்திடலாம்
சோலைத் தென்றல் பாடிடலாம்
சோகம் நீங்கி ஆடிடலாம்
நீ பாடக் கூடும் ஓர் புதிய ராகம்
ஓர் புதிய ராகம் ஹோ.....(மல்லிகை).

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.