தெய்வங்கள் கண் பார்த்தது பாடல் வரிகள்

Movie Name
Puthiya Raagam (1991) (புதிய இராகம்)
Music
Ilaiyaraaja
Year
1991
Singers
Mano, S. Janaki
Lyrics
Vaali

தெய்வங்கள் கண் பார்த்தது
தோட்டத்தில் பூப் பூத்தது
பூ ஒன்று சேய் ஆனது
பெண் ஒன்று தாய் ஆனது

ஈரைந்து மாதம் தாய் கொண்ட பாரம்
தாலாட்டத் தானே கை வந்து சேரும்
வேறென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம்..(தெய்வங்கள்)

பிள்ளை இல்லாத வீடு
முல்லை இல்லாத காடு
தொட்டில் இல்லாத இல்லம்
தென்றல் இல்லாத மன்றம்

சின்னப் பொன் வண்டு
வண்ணக் கண் ரெண்டு
ஆகாய நீலம் காட்டும்
கன்னம் பூச்செண்டு கட்டி கற்கண்டு
செந்தூரக் கோலம் தீட்டும்

மார்போடு சேர்த்து முந்தானை மூடி
பாலூட்டும் தாயின் ஆனந்தம் கோடி
வேறென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம் (பூ ஒன்று)

அன்னை என்றான பின்பு
துன்பம் முன்னூறு நாட்கள்
பிள்ளை கை வந்த பின்பு
கண்ணில் சந்தோஷப் பூக்கள்

பிள்ளைச் செல்வங்கள் பேசும் தெய்வங்கள்
எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை
தாய்மை இல்லாத பெண்மை எந்நாளும்
காணாது அன்பின் எல்லை

கை வீசி ஆடும் வைகாசி மேகம்
என் வீடு சேர நான் செய்த யோகம்
வேறென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம் (தெய்வங்கள்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.