Song lyrics

Maalai Soodum Lyrics

மாலை சூடும் மாலை நேரம் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1991
Singers
K. S. Chithra
Lyricist
Vaali
Maalai Soodum

Lyrics

Maalai Soodum Lyrics

மாலை சூடும் மாலை நேரம் தானே
சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே
இன்பச் சந்தம் பொங்கும் நெஞ்சம்
வாழ்த்துச் சொல்லும் காதல் தேவன் வாழ்க (மாலை)

கங்கைக்குக் கரைகளை தந்தவன் தான்
இந்த மங்கைக்கும் உறவை படைத்தான்
சங்கம சுகங்களைப் பெற்றிடத்தான்
அந்த நதியை கடலில் இணைத்தான்

எந்நாளும் பூ வாசம் பூவோடு வாழும்
ஒன்றானேன் உன்னோடு பூவானேன் நானும்
உன் கண்ணில் என் பார்வை பார்த்தேனே நான்
மாலை சூடும் மாலை நேரம் தானே

பெண்ணுக்கு எத்தனையோ சொந்தம் உண்டு
அதை பெண்மைக்குக் கொண்டவன் தானே
வஞ்சிக்கு என்னென்னவோ பந்தம் உண்டு
உன்னை மஞ்சத்தில் கொல்பவன் தானே

நெஞ்சோடு மாங்கல்யம் கொஞ்சாதோ என்றும்
கையோடு கை சேரும் வைபோகம் சொந்தம்
நான் பாடும் சங்கீதம் வேதங்கள் தான்
மாலை சூடும் மாலை நேரம் தானே

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people