Oh Janani Lyrics
ஓ ஜனனி என் ஸ்வரம் நீ பாடல் வரிகள்
Last Updated: Jun 07, 2023
ஆ... ஆ... ஆ...ஆ... ஆ... ஆ... ஆ...
ஓ ஜனனி... என் ஸ்வரம் நீ...
மேகம் தேடும் வானம் அனுராகம் தேடும் கானம்
வாழும் காலந்தோறும் தனை நாளும் தேடும் ஜீவன்
ஓ ஜனனி என் ஸ்வரம் நீ ஓ ஜனனி...
மாறும் எந்நாளும் காட்சிகள்
மாறும் அப்போது பாதைகள் கேளடி
பாதை இல்லாத யாத்திரை
மேகம் இல்லாத வான் மழை ஏதடி
கால தேவனே வழி விடு நேசம் வாழவே
யாரோ கண் பார்த்த பூ இது
யாரைக் கொண்டாடப் பூத்தது
தேனே விழிகள் நனையுது....ஓ...(ஜனனி)
ஜாடை இல்லாத பார்வைகள்
வார்த்தை இல்லாத பாஷைகள் பேசுமோ
பேச்சில் வராத ஆசைகள்
தோளில் விழாத மாலைகள் லாபமோ
மௌன ராகம் கேட்குமோ பாடல் ஆகுமோ
ஏதோ சொந்தங்கள் தேடினோம்
ஏதோ பந்தத்தில் வாழ்கிறோம்
மானே வாழ்க நலமுடன்.....ஒ...(ஜனனி)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.