Song lyrics

Nandri Sollave Lyrics

நன்றி சொல்லவே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1993
Singers
S. P. Balasubramaniam, Swarnalatha, Vaali
Lyricist
Vaali
Nandri Sollave

Lyrics

Nandri Sollave Lyrics

பெ -குழு : சதமானம் பவதி சதாயஷ் குருஸஷ் சதேந்திரிய ஹ
ஆயுஷ்யேந்திரியே ப்ரதி திஷ்டதி.. (இசை)

பெண் : நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே

***

ஆண் : ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது
ராப்பகலாய் எழும் துயர் உன்னை வாட்டிய போது
பெண் : சுடும் மொழி நாளும் கேட்டு இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம் என விதி வழி நானும் ஓட
ஆண் : போதும் போதும் வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

பெண் : நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே (இசை)

பெண்குழு : சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம்
சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம் ஜிம்

***

ஆண் : வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே
ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே
பெண் : திசையறியாது நானே இன்று தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீடு தானே
ஆண் : நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people