யாவருக்கும் தலைவன் பாடல் வரிகள்

Movie Name
Kandaen (2011) (கண்டேன்)
Music
Vijay Ebenezer
Year
2011
Singers
Chinmayi
Lyrics
Vaali
லாலலல லலலா... லாலலல லலலா... 
லாலலல லலலா... 

யாவருக்கும் தலைவன் எங்கும் உள்ள உருவன் 
ஊர் வணங்கும் தலைவன் 
அந்த ஒருவன் இறைவன் 
நீளக்கடல்தானாவான் 
நீந்துகின்ற மீனாவான் 
வானவெளியில் கதிராய் நிலவாய் பிரிவான் 
சோலை கொடியின் மடியில் 
மலராய் விரிவான்..... 

உனைத்தொட எனைத்தொட 
இங்கு தனித்தனி மெயிலில்லை 
உனக்கென எனக்கென தனி மழையில்லை 
சமயங்கள் சடங்குகள் அவை சமத்துவ விலங்குகள் 
உனக்கவை எதற்கென இங்கு உடைத்திடு 
உண்டியார்கள் வேரல்ல ஏழை வயிறுதான் 
அதை நிரப்பும் உனை வாழ்த்தும் 
அந்த உயிரிதான் மனிதா.... 

யாவருக்கும் தலைவன் எங்கும் உள்ள உருவன் 
ஊர் வணங்கும் தலைவன் 
அந்த ஒருவன் இறைவன் 
நீளக்கடல்தானாவான் 
நீந்துகின்ற மீனாவான் 
வானவெளியில் கதிராய் நிலவாய் பிரிவான் 
சோலை கொடியின் மடியில் 
மலராய் விரிவான்..... 


பிறர்க்கென இளகிடும் மனம் 
இறைவனின் இருப்பிடம் 
உதவிடும் கரங்களில் அவன் உறைகிறான் 
மனிதனும் பினிதனும் நல்ல மனங்களும் குணங்களும் 
நிலவிடும் இடமெல்லாம் அவன் நிறைகிறான் 

ஆஹோ... உன்னைத்தீண்டும் பூங்காற்று 
என்னைத்தீண்டுது 
உன்னைத்தாங்கும் பூமிதான் 
என்னைத்தாங்குது 
உயிரே...... 

யாவருக்கும் தலைவன் எங்கும் உள்ள உருவன் 
ஊர் வணங்கும் தலைவன் 
அந்த ஒருவன் இறைவன் 
நீளக்கடல்தானாவான் 
நீந்துகின்ற மீனாவான் 
வானவெளியில் கதிராய் நிலவாய் பிரிவான் 
சோலை கொடியின் மடியில் 
மலராய் விரிவான்..... 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.