ஒரு பார்வை ஒரு வார்த்தை பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Kandaen (2011) (கண்டேன்)
Music
Vijay Ebenezer
Year
2011
Singers
Krish
Lyrics
Krish
பாதங்கள் தேடுதே கண்கள் சுழலுதே 
வேண்டுமென்று துடிக்குதே 
என் இதயம் என் உயிரே
இரவுகள் படுதுதே
இதயம் வெடிக்குதே
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே

ஒரு பார்வை ஒரு வார்த்தை 
தந்தாலும் போதும் கண்ணா
வருவாயா தருவாயா ?
அன்பே நீ எங்கே 
நான் இன்றி நீ இல்லை 
மறு ஜென்மம் ஒன்றில்லை 
நீ இன்றி நானும் இல்லை

ஒரு பார்வை ஒரு வார்த்தை 
தந்தாலும் போதும் கண்ணா
வருவாயா தருவாயா ?
அன்பே நீ எங்கே 
பாதங்கள் தேடுதே கண்கள் சுழலுதே 
வேண்டுமென்று துடிக்குதே 
என் இதயம் என் உயிரே
இரவுகள் படுதுதே
இதயம் வெடிக்குதே
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே

நீ பார்த்தது என் விழிகளுக்குள்
நான் இருப்பது உன்
கண்கள் இமையைப் போல்
கை நீட்டினேன் உன்னோடு வாழ
மனம் சேர்ந்ததால் நம்
வாழ்க்கை ஒன்றானதே
அலை மோத மோத கடலின்
மணலும் ஈரம் ஆனதே
உன்னை பார்த்து பார்த்து
ரசித்தே இருந்தால்
காதல் வாழுமே
உயிரே உறவே ..

ஆ ஆ ..

மனம் கொஞ்சுமா உயிர் கெஞ்சுமா ?
இது போதுமா இன்னும் தயக்கமா ?
இதழ் சேருமா கரம் மூடுமா?
வரும் நாட்களில் கனவு நிறைவேறுமா ?
பூவில் வண்டு வந்து
தேனை உறிய நேரம் ஆகுமா ?
நீ என்னை வந்து அணைத்துக் கொள்ள
என் ஒளி வேண்டுமா ?
உயிரே உறவே ...

ஒரு பார்வை ஒரு வார்த்தை
தந்தாலும் போதும் கண்ணா
வருவாயா தருவாயா ?
அன்பே நீ எங்கே 
நான் இன்றி நீ இல்லை 
மறு ஜென்மம் ஒன்றில்லை 
நீ இன்றி நானும் இல்லை

ஒரு பார்வை ஒரு வார்த்தை
வேண்டும் என்று துடிக்குதே
என் இதயம் என்னுயிரே
வருவாயா ? தருவாயா?
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே
பாதங்கள் தேடுதே கண்கள் சுழலுதே
வேண்டுமென்று துடிக்குதே 
என் இதயம் என் உயிரே
இரவுகள் படுதுதே
இதயம் வெடிக்குதே
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.