ஒத்தடி ஒத்தடி பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Dharmathin Thalaivan (1988) (தர்மத்தின் தலைவன்)
Music
Ilaiyaraaja
Year
1988
Singers
Sunandha, Malaysia Vasudevan
Lyrics
Vaali
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மஅடி
பட்டணம் அறிஞ்ச போக்கிரி
அடி பட்டியும் தெரிஞ்ச பக்கிரி

அட என்னோட மோதாம வாமா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டுதான் போட்டுத்தான் பார்ப்போமா

அட வாம்மா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டுதான் போட்டுத்தான் பார்ப்போமா

ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ

ஹேய் வில்லாதி வில்லனடி எனக்கு இணையாகத்தான்
கில்லாடி இல்லையடி
அட வெச்சாலும் வச்சானடி உனக்கு சரியாகத்தான்
மச்சானும் ஒத்த வெடி
சொல்லணும் வந்தனம்
இல்ல மூலையில் குந்தனும்

மக்கு போல் நிக்குறே, செக்கு போல் சுத்துற சிக்கலில் சிக்கலாமா?
அட எப்பவும் துள்ளுற சொப்பன சுந்தரி
இப்படி முழிக்கலாமா?

ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மஅடி
வேட்டுதான் போட்டுத்தான் பார்ப்போமா
அட வாம்மா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டுதான் போட்டுத்தான் பார்ப்போமா?

ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ................

தெம்மாங்கு பாடட்டுமா மயிலே ஜதியோடு நான்
தில்லானா ஆடட்டுமா?
அட இந்தாடி டப்பங்குத்து இதுல பெரியாளு நான்
சும்மா நீ வாய பொத்து

வித்தையை கத்தவன், அடி பேரு தான் பெத்தவன்
பத்து பேர் மத்தியில் சொத்தைய சொள்ளையா
என்னை நீ எண்ணலாமா?
அட சட்டிய தொட்டதும் கையிலே சுட்டதும்
சந்தியில் நிக்கலாமா?

என்னடி சங்கதி அம்மணி உங்கதி
பின்னாலே என்னாகும் பாரடீ

ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மஅடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.