ராக்கோழி கூவும் பாடல் வரிகள்

Movie Name
Maharasan (1993) (மகராசன்)
Music
Ilaiyaraaja
Year
1993
Singers
S. Janaki, S. P. Balasubramaniam, Vaali
Lyrics
Vaali
பெண் : அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகி போச்சு (இசை)

பெண் : அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகி போச்சு
அந்த ஏற்காடு ஊட்டிப் போல
குளிர் ஏராளம் ஏறிப் போச்சு
குளிர் அடிக்க அடிக்க
கட்டி புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க
கட்டி புடிக்க புடிக்க வா மாமா
அடி ஆத்தி ஆடு சுதி ஏத்தி பாடு

ஆண் : அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகி போச்சு

***

ஆண் : தட்டி தட்டி தவுல மெல்லத் தட்டி
விடியும் வரை கச்சேரி வைக்கலாமா
பக்க மேளம் உன் பக்கம் வரும் நேரம்
நீ வித்தைகளை காட்டாம நிக்கலாமா

பெண் : கட்டி கட்டி இறுக உன்னைக் கட்டி
கனிஞ்சிருக்கும் கொய்யாவக் கிள்ளலாமா
என்ன வேணும் என் எண்ணங்களை நானும்
உன் கிட்ட வந்து காதோடு சொல்லலாமா

ஆண் : அடி நீ என்ன கேட்டாலும் தாரேன்
அந்த தோப்போரம் வான் னாளும் வாரேன்

பெண் : விடிஞ்சாலும் மாமா விடமாட்டேன் ஆமாம்

ஆண் : அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகி போச்சு

***

பெண் : கொஞ்சி கொஞ்சி மடியில் உன்னைக் கொஞ்சி
கலந்திருக்க வந்தாச்சு திருநாளு
கன்னித் தோளு கைத்தொட்டு கொஞ்சம் ஆளு
என் வள்ளிக் குப்பம் கொண்டாடும் வடிவேலு

ஆண் : சுத்தி சுத்தி நிதமும் என்னை சுத்தி
புடிச்சுப் புட்டே இந்நேரம் வலைவீசி
மெத்தப் போட உன் மந்திரத்தில் ஆட
நான் ஒத்துக்கிட்டேன் வாயேண்டி மகராசி

பெண் : நிலா என் மேலக் கீழாட்டம் காயும்
இப்போ உன் மேல என் மேனி சாயும்

ஆண் : ஆடி ஆத்தி ஆடு சுதி ஏத்தி பாடு

பெண் : அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகி போச்சு

ஆண் : குளிர் அடிக்க அடிக்க
கட்டி புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க
கட்டி புடிக்க புடிக்க வாம்மா வா
ஆடி ஆத்தி ஆடு சுதி ஏத்தி பாடு

அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகி போச்சு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.