Song lyrics

Nil Nil Nil Lyrics

நில் நில் நில் பதில் சொல் பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Ilaiyaraaja
Year
1994
Singers
Ilaiyaraaja, Uma Ramanan
Lyricist
Vaali
Nil Nil Nil

Lyrics

Nil Nil Nil Lyrics

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே

நாணம் எல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்தால்
நான் அணைப்பேன் உன்னை பூங்கரத்தால்

ஏகாந்த வேளையில் ஏன் இந்த ஊடல்கள்
ஆரம்பம் ஆனதோ ஆனந்த தேடல்கள்

தேன் கூட்டில் உள்ள தேன் யாவும் மனம் வேண்டிடாதோ
நூல் கூட இடை நுழையாமல் எனைச் சேர்நதிடாதோ..சொல்..நில்

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே

ஓவியமாய் உன்னை தீட்டி வைத்தேன்
உள் மனதில் அதை மாட்டி வைத்தேன்

மீன் விழுந்த கண்ணில் நான் விழுந்தேன் அன்பே
ஊர் மறந்து எந்தன் பேர் மறந்தேன் அன்பே

கூ கூ கூ என கை கோர்த்து குயில் கூவிடாதோ
பூ பூத்து பனிப்பூ பூத்து மடி தாவிடாதோ ..சொல்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people