ஊரோரமா ஆத்துப்பக்கம் பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Idaya Kovil (1985) (இதயக் கோவில்)
Music
Ilaiyaraaja
Year
1985
Singers
Ilaiyaraaja
Lyrics
Vaali
ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தபக்கம் குருவிகூடு அட
ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தபக்கம் குருவிகூடு
ஆண் குருவி தான் இறையைத்தேடி போயிருந்தது
பெண் குருவி தான் கூட்டுக்குள்ளே காத்திருந்தது
வீட்டை தேடி ஆண் குருவி தான் வந்து சேர்ந்தது
கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணா சேர்ந்தது
ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தபக்கம் குருவிகூடு

அங்கே தினம் முத்தம் இடும் சத்தம் வருது
இஙே அது வந்தால் பெருங்குற்றம் வருது
அஙே ஒரு பெட்டை பல முட்டை இடுது
இஙே பல பெட்டை விரல் தொட்டால் சுடுது
கண்ணாடி மீனா பின்னாடி போனா
கண்ணால முறைப்பாளே
என்னான்னு கேட்டு கூச்சல்கள் போட்டு
வில்லாட்டம் விறைப்பாளே
னாள்தோறுமே உறவைக்காட்டும் பண்பாடிடும் குருவி கூட்டம் நான் தான்..
(ஊரோரமா ஆத்துப்பக்கம்)

அங்கே ஒரு சொற்கம் அது இங்கே வருமோ
இங்கே பல வர்க்கம் இது இப்போ தருமோ
எல்லாம் ஒரு சொந்தம் என எண்ணும் பறவை
கண்ணும் இள நெஞ்சும் அதில் காணும் உறவை
பெண்பார்க்கும்போதே பேரங்கள் பேசும்
ஆண் வர்க்கம் அங்கேது
அம்மாடி வேண்டாம் கல்யாண ஆசை
நம்மாலே ஆகாது
நாம்தான் அந்த பறவை கூட்டம் நாள்தோறுமே ஆட்டம் பாட்டம் வா..வா..
(ஊரோரமா ஆத்துப்பக்கம்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.