ரயிலப் போல ஜோரா பாடல் வரிகள்

Movie Name
Thangamani Rangamani (1989) (தங்கமணி ரங்கமணி)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
Mano
Lyrics
Vaali
ரயிலப் போல ஜோரா
பொண்ணு மயிலப் போல வாரா
குன்னக்குடி சந்தையிலே
கொட்டி வெச்ச குண்டுமல்லி

ரயிலப் போல ஜோரா
பொண்ணு மயிலப் போல வாரா
குன்னக்குடி சந்தையிலே
கொட்டி வெச்ச குண்டுமல்லி

ரயிலப் போல ஜோரா
பொண்ணு மயிலப் போல வாரா....

கடைவீதி வந்தாலே என்னெதிரில் நீயிருக்க
கண்ணு ரெண்டும் உனைத்தானே தேடும்
கையாலே உனைத் தொட்டு ஆசை தீரவே புரட்டி
பார்த்தாலே புது இன்பம் ஊறும்

கன்னி மாங்கனி என் காதல் தேவி நீ
என்னைப் பாரம்மா என் இதய மோகினி
இந்த நாடெல்லாம் நீ சுத்த
நானுன்னை சுத்தி வரேன் வாம்மா

இந்த காளை முகம் பாரம்மா
வாழ்வில் என் ராணி நீதானம்மா

ரயிலப் போல ஜோரா
பொண்ணு மயிலப் போல வாரா
குன்னக்குடி சந்தையிலே
கொட்டி வெச்ச குண்டுமல்லி

ரயிலப் போல ஜோரா
பொண்ணு மயிலப் போல வாரா...

உன் பார்வை பட்டாலே ஒளியாகும் என் வீடு
உருவாகும் புது ராஜயோகம்
நீ வந்தால் எல்லாமே நிலை மாறும் நெனச்சபடி
நெஞ்சோடு சுகம் வந்து சேரும்

கருணை வடிவமே கொஞ்சம் கடைக்கண் பாரம்மா
கனவு தெய்வமே என் கவலை தீரம்மா
நீ அணைச்சா நான் சிரிப்பேனே
ஆகாயத்தில் மிதப்பேனே

வா வா ஸ்ரீ லட்சுமி ஜெயலட்சுமி
வந்தா நல்லக் காலம் பாக்யலட்சுமி

ரயிலப் போல ஜோரா
பொண்ணு மயிலப் போல வாரா
ஹோய்...குன்னக்குடி சந்தையிலே
கொட்டி வெச்ச குண்டுமல்லி

ரயிலப் போல ஜோரா
பொண்ணு மயிலப் போல வாரா...ஹாய் ஹாய்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.