நீங்க நெனச்சா நடக்காதா பாடல் வரிகள்

Movie Name
Kanavan (1968) (கணவன்)
Music
M. S. Viswanathan
Year
1968
Singers
P. Susheela
Lyrics
Vaali
நீங்க நெனச்சா நடக்காதா

நான் நெனச்சது கெடைக்காதா

ஒரு மாதிரியா இருக்கு

அந்தி பொழுது வந்தா எனக்கு

கண் பேசுது ஜாடையிலே

பெண் வாடுது ஆசையிலே

நீங்க நெனச்சா நடக்காதா

நான் நெனச்சது கெடைக்காதாஆத்து நீரோடு அலையிருக்கும்

அலையை அணைத்திட கரையிருக்கும்

கரையின் ஓரத்தின் கொடியிருக்கும்

கொடியை தழுவிட செடியிருக்கும்

ஆ தனிமையில் இருக்கையில் குளிருது

எனக்கொரு துணை எங்கே

நீங்க நெனச்சா நடக்காதா

நான் நெனச்சது கெடைக்காதாநீலப் பூப்போட்ட சேலை கட்டி

நெத்தி நெறைய பொட்டு வச்சேன்

காலம் பூராவும் காத்திருக்கேன்

காதல் போகாம பார்த்திருக்கேன்

ஆ அடிக்கடி துடிக்குது துவழுது

உனக்கிது புரியல்லே

நீங்க நெனச்சா நடக்காதா

நான் நெனச்சது கெடைக்காதாநேத்து நான் வச்ச சின்ன மரம்

பூத்து குலுங்குது தோட்டத்திலே

பூத்து நாளான கன்னி மரம்

காய்ச்சு கனிந்திட நேரம் வல்லே

ஆ மயக்கும் கெறக்கமும் வருகுது

இதுக்கொரு வழியென்ன

நீங்க நெனச்சா நடக்காதா

நான் நெனச்சது கெடைக்காதா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.