மயங்கும் வயது பாடல் வரிகள்

Movie Name
Kanavan (1968) (கணவன்)
Music
M. S. Viswanathan
Year
1968
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Vaali
மயங்கும் வயது மடிமேல் விழுந்து
மயங்கும் வயது மடிமேல் விழுந்து
இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து
இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து

ஆடையில் மூடிய ஒரு அழகிருக்க
ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க
ஆடையில் மூடிய ஒரு அழகிருக்க
ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க
வாவென ஜாடையில் எனை வரவழைக்க
வந்ததும் கைகளும் மெல்ல அணைத்திருக்க

மூவகை தேன் கனி ஒன்று குறைந்திருக்க
மூவகை தேன் கனி ஒன்று குறைந்திருக்க
முல்லைப்பூ கன்னத்தில் முத்தம் பதிக்க
முல்லைப்பூ கன்னத்தில் முத்தம் பதிக்க
முதலில் தயக்கம் முடிவில் மயக்கம்
இடையில் நெருக்கம் இருந்தால் இனிக்கும்

மயங்கும் வயது மடிமேல் விழுந்து
இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து
இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து விருந்து

மாமர தோப்பினில் வண்டு பறந்து வரும்
மாம்பழச் சாரினில் வந்து மயங்கி விழும்
மாமர தோப்பினில் வண்டு பறந்து வரும்
மாம்பழசாரினில் வந்து மயங்கி விழும்
மீறிய போதயில் தன்னை மறந்திருக்கும்
உண்டு போனதும் இன்னும் மிச்சம் சுவை இருக்கும்

ஆடிய நாடகம் நெஞ்சில் நினைவிருக்கும்
ஆடிய நாடகம் நெஞ்சில் நினைவிருக்கும்
ஆமாமா என்னென்ன நடந்திருக்கும்
நினைத்தால் தொடங்கும் அணைத்தால் அடங்கும்
தொடத்தான் தொடரும் தொடர்ந்தால் வளரும்


இதுதான் உறவு நெடுநாள் கனவு
இனிமேல் வரவு இளமை செலவு
இதுதான் உறவு நெடுநாள் கனவு
இனிமேல் வரவு இளமை செலவு 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.