ஒரு வாலுமில்லே பாடல் வரிகள்

Movie Name
Idhaya Veenai (1972) (இதய வீணை)
Music
Shankar-Ganesh
Year
1972
Singers
T. M. Soundararajan
Lyrics
Vaali
ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே 
சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே 
இந்தக் காட்டுக்குள்ளே உள்ள மிருகம் எல்லாம் 
இந்தக் காட்டுக்குள்ளே உள்ள மிருகம் எல்லாம் 
அதைக் காட்டிலும் எத்தனையோ தேவலே

ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே 
சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே 


நாய்கள் கடிப்பதும் கழுதை உதைப்பதும்
இயற்கை என்பது தெரியும்
நாய்கள் கடிப்பதும் கழுதை உதைப்பதும்
இயற்கை என்பது தெரியும் 
புலிகள் பாய்வதும் நரிகள் ஏய்ப்பதும்
பிறவி குணம் என்று புரியும்
எந்தெந்த நேரத்தில் கடிப்பான் 
இவன் எந்தெந்த வேளையில் உதைப்பான் 
எந்தெந்த நேரத்தில் கடிப்பான் 
இவன் எந்தெந்த வேளையில் உதைப்பான் 
யாருக்கு இவர்களைத் தெரியும்
பார்வைக்கு குணம் என்ன புரியும்

ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே 
சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே 


அன்னை மடியிலே ஆடிப் பழகிடும்
பிள்ளை வடிவிலே உள்ள வரை
அன்னை மடியிலே ஆடிப் பழகிடும்
பிள்ளை வடிவிலே உள்ள வரை
அன்பு மழலையில் வஞ்சமில்லையே 
மனிதர் யாவரும் நல்லவரே
அன்பு மழலையில் வஞ்சமில்லையே 
மனிதர் யாவரும் நல்லவரே
தாய் கொடுத்த பால் குடித்து 
வாழ்ந்திருக்கும் பிள்ளை
வளர்ந்த பின் அது போல் இல்லை

ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே 
சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே 


பாவம் ஓரிடம் பழிகள் ஓரிடம் 
பல பேர் வாழ்க்கையில் நடக்கும்
பாவம் ஓரிடம் பழிகள் ஓரிடம் 
பல பேர் வாழ்க்கையில் நடக்கும்
உண்மை என்பது ஊமையாகவே 
கொஞ்சக் காலம் தான் இருக்கும்
கற்புக்கு இலக்கணம் வகுக்கும்
பெண்மைக்கு களங்கங்கள் உரைக்கும்
கற்புக்கு இலக்கணம் வகுக்கும்
பெண்மைக்கு களங்கங்கள் உரைக்கும்
யாருக்கும் தீர்ப்பொன்று கிடைக்கும்
தர்மத்தின் கண்ணை அது திறக்கும்

ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே 
சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே 
இந்தக் காட்டுக்குள்ளே உள்ள மிருகம் எல்லாம் 
இந்தக் காட்டுக்குள்ளே உள்ள மிருகம் எல்லாம் 
அதைக் காட்டிலும் எத்தனையோ தேவலே

ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே 
சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.