சின்னச் சின்ன பாடல் வரிகள்

Movie Name
Senthamil Pattu (1992) (செந்தமிழ் பாட்டு)
Music
Ilaiyaraaja
Year
1992
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன

சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன ..

***

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா

பெண் : ஹஹா..அது தீண்டும் மேகமில்ல
தேகம் சிலிர்க்குதம்மா..

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா
நனைந்த பொழுதிலும் குளிர்ந்த மனதினில்
ஏதோ ஆசை துடிக்குதம்மா
மனித ஜாதியின் பசியும் தாகமும்
உன்னால் என்றும் தீருமம்மா
வாரித் தந்த வள்ளல் என்று
பாரில் உன்னைச் சொல்வதுண்டு
இனமும் குலமும் இருக்கும் உலகில்
அனைவரும் இங்கு சரிசமம் என
உணர்த்திடும் மழையே..

சின்னச் சின்ன
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன தூறல் என்ன

***

பிழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை

பெண் : படிச்சவன் பாட்டை கெடுத்த கதையால்ல இருக்கு
பிழைக்கும்ன்னு எழுதலையே
மழைக்குன்னுதானே எழுதியிருக்கேன்

ஓஹோ..மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
வெடித்த பூமியும் மானம் பார்க்கையில்
நீயோ கண்ணில் தெரிவதில்லை
உனது சேதியை பொழியும் தேதியை
முன்னால் இங்கே யாரறிவார்
நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும்
நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்
உனது பெருமை உலகம் அறியும் இடியென்னும்
இசை முழங்கிட வரும் மழையெனும் மகளே

சின்னச் சின்ன
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன

சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.