வண்ண வண்ண பாடல் வரிகள்

Movie Name
Senthamil Pattu (1992) (செந்தமிழ் பாட்டு)
Music
Ilaiyaraaja
Year
1992
Singers
Jikki
Lyrics
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு

வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசை தான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
கவலை மறக்கும் நாளும்

வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு

***

மொழிகள் வெவ்வேறு பாடல் கொண்டாலும்
இனிமை ஒன்றானது
தமிழர் பண்பாட்டைக் கூறும் பாட்டுக்கு
தமிழே கண் போன்றது

மொழிகள் வெவ்வேறு பாடல் கொண்டாலும்
இனிமை ஒன்றானது
தமிழர் பண்பாட்டைக் கூறும் பாட்டுக்கு
தமிழே கண் போன்றது
மூங்கிலிலை மோதி வரும்
காற்றும் இசை தான் தராதோ...
மூன்று தமிழ் வாசமும்
நாடுப் புறப் பாடலில்
புதுப் புனல் போலே வராதோ...

வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு

***

ஆ...ஆ...ஆ...ஆ...
பிள்ளை என்கின்ற இசையின் தாய் தந்தை
யாரோ யார் சொல்லுவார்
யாரால் எப்போது இசை தான் உண்டாச்சு
பதில் தான் யார் சொல்லுவார்

பிள்ளை என்கின்ற இசையின் தாய் தந்தை
யாரோ யார் சொல்லுவார்
யாரால் எப்போது இசை தான் உண்டாச்சு
பதில் தான் யார் சொல்லுவார்
பாயும் நதி மூலம் என்ன
பார்பதில்லை யாரும் என்னாளும்
நானும் இந்த பூமியில்
நீல நதி போலவே
நடந்திடுவேன் எங்கேயும்...ம்...ம்...ம்

வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசை தான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
கவலை மறக்கும் நாளும்

வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.