கூட்டுக்கொரு பாட்டிருக்கு பாடல் வரிகள்

Last Updated: Feb 06, 2023

Movie Name
Senthamil Pattu (1992) (செந்தமிழ் பாட்டு)
Music
Ilaiyaraaja
Year
1992
Singers
Mano
Lyrics
Vaali
கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா
இணையா இருக்க இசைதான் படிக்க
கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா

***

சின்ன சின்ன பறவை கூட்டம்
என் பாட்டுக்கு தலையை ஆட்டும்
சின்ன சின்ன பறவை கூட்டம்
என் பாட்டுக்கு தலையை ஆட்டும்
கட்டுகளும் காவல்களும் ஆத்தாடி இங்கே இல்லை
கொத்து கொத்தா நோட்டு விழும்
ஆனந்தம் நெஞ்சுக்குள்ளே
கூண்டு கிளி போலிருந்தா
கொஞ்சும் கிளி வாடுமம்மா
கூண்டை விட்டு வாடி அம்மா

கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா

***

சங்கீதத்தை விலையை போட்டா
சந்தையிலே வாங்ககூடும்
சங்கீதத்தை விலையை போட்டா
சந்தையிலே வாங்ககூடும்
சாமி தந்த செல்வம் இது
வேறென்ன வேணும் சொல்லு
சிந்துகளை அள்ளிதர்றேன்
நாள் தோறும் வாங்கிசெல்லு
நான் அறிஞ்ச பாட்டு எல்லாம்
நீ அறிஞ்சு பாட வேணும்
பொங்கி பொங்கி ஓட வேணும்

கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா
இணையா இருக்க இசைதான் படிக்க
கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.