இந்திரன் போலே சந்திரன் போலே பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Adharmam (1994) (அதர்மம்)
Music
Ilaiyaraaja
Year
1994
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Vaali
தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு

இந்திரன் போலே சந்திரன் போலே
பொறக்கப்போறான் பிள்ளை பொறக்கப்போறான்

செண்பகம் போலே செவ்வல்லி போலே
சிரிக்கப்போறான் மெல்ல சிரிக்கப்போறான்

தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு

கைவளை எடுத்து மாட்டடி
குங்கும சாந்து தீட்டடி

தானனா தானனா

அன்னத்தின் அழகை கூட்டடி
ஆரத்தி எடுத்து காட்டடி

தானனா தானனா

கண்டவங்க கண்ணுபடும்
கண்ணிரு கழித்து இங்க போடனும்

நல்லபடி பெத்தெடுக்க
அம்மனை நேந்துகிட்டு பாடனும்

ஊரு கூடி சாமியை
வேண்டிக் கொள்ளும் நாள்

தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு

இந்திரன் போலே சந்திரன் போலே
பொறக்க போறான் பிள்ளை பொறக்க போறான்

செண்பகம் போலே செவ்வல்லி போலே
சிரிக்க போறான் மெல்ல சிரிக்க போறான்

தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு

எப்பவும் நமக்கு காவல்தான்
எச்சரித்து எழுப்பும் சேவல்தான்

தானனா தானனா

தென்னகம் புகழும் வீரன் போல்
தேசிங்கு ராஜன் பேரன் போல்

தானனா தானனா

சிங்ககுட்டி தோளைத்தட்டி
திக்கெட்டும் நடந்திடும் பாரடி

செல்ல மகன் துள்ளி வர
நில் என்று தடுப்பவன் யாரடி

யாரும் வந்து சீண்டினால்
பாயும் வேங்கைதான் ஹஹ

தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு

இந்திரன் போலே சந்திரன் போலே
பொறக்க போறான் பிள்ளை பொறக்க போறான்

செண்பகம் போலே செவ்வல்லி போலே
சிரிக்க போறான் மெல்ல சிரிக்க போறான்

தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.