ஒரு பெண்ணைப் பார்த்து பாடல் வரிகள்

Last Updated: May 30, 2023

Movie Name
Dheiva Thaai (1964) (தெய்வத் தாய்)
Music
Viswanathan Ramamoorthy
Year
1964
Singers
T. M. Soundararajan
Lyrics
Vaali
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை

அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை

லல லால்ல லால்லலா லால்ல லால்லலா லால்ல லால்ல லா...
லல லால்ல லால்லலா லால்ல லால்லலா லால்ல லால்ல லா

கொடி மின்னல் போல் ஒரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயில் ஓசை போல் ஒரு வார்த்தை
குழலோ யாழோ என்றிருந்தேன் 
கொடி மின்னல் போல் ஒரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயில் ஓசை போல் ஒரு வார்த்தை
குழலோ யாழோ என்றிருந்தேன்
நெஞ்சொடு நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை சேர்த்தாள்
நெஞ்சொடு நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை சேர்த்தாள்
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை
லல லல்ல லால்லலா லல்ல லால்லலா லல்ல லால்லா லா

கலை அன்னம் போலவள் தோற்றம் இடையில் இடையோ கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம் இதழில் மதுவோ குறையாது 

என்னோடு தன்னை சேர்த்தாள்... தன்னோடு என்னை சேர்த்தாள்

இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள் நாளை என் செய்வாளோ
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை

லல லல்ல லால்லலா லல்ல லால்லலா லல்ல லால்லா லா

லல லல்ல லால்லலா லல்ல லால்லலா லல்ல லால்லா லா 

லல லல்ல லால்லலா லல்ல லால்லலா லல்ல லால்லா லா

லல லல்ல லால்லலா லல்ல லால்லலா லல்ல லால்லா லா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.