உண்மையை வெளி இட்டு பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Dheiva Thaai (1964) (தெய்வத் தாய்)
Music
Viswanathan Ramamoorthy
Year
1964
Singers
Seerkazhi Govindarajan
Lyrics
Vaali
உண்மையை வெளி இட்டு
உணர்ச்சிகளை கருக விட்டு
பெண்மைக்கோர் அணிகலமாய்
பிள்ளை நலம் காத்திருந்தாள்
பிள்ளை நலம் காத்திருந்தாள்
கதை முடியும் முன்னாலே
கண்ணை மூடினாள்
சொந்த கடமையிலே
தாய் குலத்தின் தெய்வம் ஆகினாள்
வாழ்வின் கதை முடியும் முன்னாலே
கண்ணை மூடினாள்
சொந்த கடமையிலே
தாய் குலத்தின் தெய்வம் ஆகினாள்

பதி முகத்தை பார்த்திருக்கும்
விதவை ஆகினாள்
இவள் பதில் அளிக்க முடியாத
கேள்வி ஆகினாள்
விதி வகுத்த பாதையிலே
விரைந்து ஓடினாள்
உண்மை வெளியாகும் நேரத்திலே
ஊமை ஆகினாள்


இவள் தெய்வத்தாய்
இவள் தெய்வத்தாய்
இவள் தெய்வத்தாய்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.