கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம் பாடல் வரிகள்

Last Updated: Mar 21, 2023

Movie Name
Poovarasan (1996) (பூவரசன்)
Music
Ilaiyaraaja
Year
1996
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Vaali
கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம் கட்டினதுக்கு அப்புறம்
வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம் முத்த இதழ் ஒத்தடம்

புடவை மயக்கம் வருதே வருதே
உடம்பு முழுக்க சுடுதே சுடுதே
கிடந்து தவிக்கும் உயிரே உயிரே
கடைஞ்சு எடுத்த தயிரே தயிரே

கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம் கட்டினதுக்கு அப்புறம்
வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம் முத்த இதழ் ஒத்தடம்

ஊதக்காத்து ராப்போது தீ போல ஆயாச்சு
கூறை பார்த்து ராத்தூக்கம் எப்போதோ போயாச்சு

கோடு பார்த்து வெச்சாலும் உன் ஆச நிக்காது
கோலம் போட கூடாதே நீ கொஞ்சம் உக்காரு

சின்ன சின்னக்கோலம் போட்டுப் பார்க்கலாமா
புள்ளி வைக்க வேணும் தள்ளி நிக்கலாமா

சுத்தமான மனசு கெட்டுப் போகலாமா
குத்தம் சொல்லி யாரும் வம்பு பேசலாமா

பொல்லாத சில்வண்டு பஞ்சாங்கம் பாத்தா பூந்தேன வாங்கும்
கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம் கட்டினதுக்கு அப்புறம்
வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம் முத்த இதழ் ஒத்தடம்

உனக்கு புடவை மயக்கம் வருதே வருதே
உடம்பு முழுக்க சுடுதே சுடுதே
கிடந்து தவிக்கும் உயிரே உயிரே
ஏ.. கடைஞ்சு எடுத்த தயிரே தயிரே

கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம் கட்டினதுக்கு அப்புறம்
வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம் முத்த இதழ் ஒத்தடம்

வெண்ணிலாவில் சோறாக்கி நாம் தின்னக்கூடாதா
தென்றல் வந்து நம்மோடு தெம்மாங்கு பாடாதா

வெண்ணிலாவும் என்னான்னு கீழால பாக்காதா
சோடி ஒன்னு அங்கேன்னு ஊராருக்கு சொல்லாதா

உன்னை என்னைப் போல நூறு பேரப் பாத்து
பழகிப் போனதம்மா பால் நிலாவும் நேத்து

சொல்லி சொல்லி என்ன சொக்க வைக்கும் மாமா
இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கலாமா

நாள் பார்த்து நாள் பார்த்து நாள் போகக்கூடும் நடிக்காதே மானே

கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம் கட்டினதுக்கு அப்புறம்
வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம் முத்த இதழ் ஒத்தடம்

எனக்கு புடவை மயக்கம் வருதே வருதே
உடம்பு முழுக்க சுடுதே சுடுதே
கிடந்து தவிக்கும் உயிரே உயிரே
கடைஞ்சு எடுத்த தயிரே தயிரே

கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்
கட்டினதுக்கு அப்புறம்
வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம்
ம்ம்… ஹ்ஹ்ம்…

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.