கல்யாணம் கட்டாத கன்னிப் பொண்ணுங்க எல்லாருக்கும் பாடல் வரிகள்

Movie Name
Thangamana Purushan (1989) (தங்கமான புருசன்)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
கல்யாணம் கட்டாத கன்னிப் பொண்ணுங்க எல்லாருக்கும்
கிடைக்கணும் கிடைக்கணும் கிடைக்கணும்
தங்கமான புருஷன் தங்கமான புருஷன்
ஆமா தங்கமான புருஷன் தங்கமான புருஷன் ( 2 )

தஞ்சாவூர் கதம்பத்தை வாங்கி தினம்
தலை மேலே வைக்கத்தான் ஏங்கி
பொஞ்சாதி எதிர்பார்க்கும் வேளை
புருஷன் பூவோடு வரவேணும் மாலை

அவ மனம் போலத்தான் அவன் உறவாடணும்
கண்ணு கலங்காமத்தான் வச்சு காப்பாத்தணும்
தாலிப் போட்ட தாரத்துக்கு
வேலிப் போல வாழ வேணும்

தங்கமான புருஷன் தங்கமான புருஷன்
ஆமா தங்கமான புருஷன் தங்கமான புருஷன்

கல்யாணம் கட்டாத கன்னிப் பொண்ணுங்க எல்லாருக்கும்
கிடைக்கணும் கிடைக்கணும் கிடைக்கணும்
தங்கமான புருஷன் தங்கமான புருஷன்
ஆமா தங்கமான புருஷன் தங்கமான புருஷன்

சீர் கொண்டு வாவென்று சொல்லி
பெண்ணை தாய் வீடு போவென்று தள்ளி
ஆர்ப்பாட்டம் செய்யாத புருஷன்
உண்மை அன்பான பண்பான மனுஷன்

குத்து விளக்கேற்றத்தான் வந்த பெண் பிள்ளைதான்
சொத்து சுகமென்றுதான் எண்ணும் ஆண்பிள்ளைதான்
மாலை போட்ட மனைவி கூட
காலம் தோறும் வாழ்ந்துக் காட்டும்

தங்கமான புருஷன் தங்கமான புருஷன்
ஆமா தங்கமான புருஷன் தங்கமான புருஷன்

கல்யாணம் கட்டாத கன்னிப் பொண்ணுங்க எல்லாருக்கும்
கிடைக்கணும் கிடைக்கணும் கிடைக்கணும்
தங்கமான புருஷன் தங்கமான புருஷன்
ஆமா தங்கமான புருஷன் தங்கமான புருஷன்..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.