கல்யாணப் பொண்ணு பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Padagotti (1964) (படகோட்டி)
Music
Viswanathan Ramamoorthy
Year
1964
Singers
T. M. Soundararajan
Lyrics
Vaali
கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் 
கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் - அம்மா
பூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல் 
வங்கி வளையல் சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க

அத்தானின் காதல் முத்தாமல் இருந்தால் பித்தாக செய்யும் வளையல் - சில
சித்தானை உடம்பு வத்தாமல் இருந்தால் ஒத்தாசை செய்யும் வளையல்

அன்ன நடை பின்னி வர சின்ன இடை மின்னி வர முன்னாடி வரும் வளையல் - இது
அத்தை மகள் ரத்தினத்தின் அச்சடித்த சித்திரத்தின் கையோடு வரும் வளையல்

கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் - அம்மா
பூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல் 
வங்கி வளையல் சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க

பெண்டாட்டி புருஷன் ரெண்டாக இருந்தா மூணாகச் செய்யும் வளையல் - இது
ஒட்டாத மனசில் கிட்டாத சுகத்தைக் கட்டாயம் தரும் வளையல்
மாமனார மாமியார சாமியாரா மாத்திவிட மந்திரிச்சுத் தந்த வளையல்
காளையர்கள் கெஞ்சி வர கன்னியர்கள் கொஞ்சி வரத் தூதாக வந்த வளையல்

கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் - அம்மா
பூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல் 
வங்கி வளையல் சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.