கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு பாடல் வரிகள்

Movie Name
Thangamana Purushan (1989) (தங்கமான புருசன்)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Pulamaipithan
கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான் ஹாஹ்
ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான்
எப்போதும் இங்கே நல்லவன் வாழ்வான்

கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

ஊரோடு சேர்ந்து ஒண்ணாக வாழ்ந்து
பேரோடு போனார் சில பேரு
அவர் போனாலும் நெஞ்சில் இருப்பாரு
கண்மூடும் வேளை காதற்ற ஊசி
வாராது என்றான் கவிஞன்
அவன் எல்லோரும் போற்றும் அறிஞன்

பட்டினத்து பிள்ளை அவன்
சொல்லித் தந்த சொல்லை
பட்டினத்து பிள்ளை சொல்லித் தந்த சொல்லை
சிந்தித்து பாத்து நீ உன்னை மாத்து

கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

ஆட்டுக்கு வால நீட்டாம சாமி
வச்சாலும் வச்சான் அளந்து அந்த
வாலோட தேவைய தெரிஞ்சு ஹாஹ்
ஆனாலும் இந்த பாழான மனசில்
ஆசைக்கு இல்லை அளவு
அதில் அன்றாடம் நூறு கனவு

உன்னவிட ஒருத்தன் இந்த ஊருக்குள்ள இருப்பான்
உன்னவிட ஒருத்தன் ஊருக்குள்ள இருப்பான்
பொல்லாத மூடா துள்ளாதே போடா

கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான் ஹாஹ்
ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான்
எப்போதும் இங்கே நல்லவன் வாழ்வான்

கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.