எதுத்த வீட்டு ஜோடியப் போல் பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Thirunelveli (2000) (திருநெல்வேலி)
Music
Ilaiyaraaja
Year
2000
Singers
Arun Mozhi, K. S. Chithra
Lyrics
Pulamaipithan

எதுத்த வீட்டு ஜோடியப் போல்
இன்பமாக இருப்போமுன்னு
நெனச்சிருந்தேன் பொன் மயிலே
நான் இஷ்டப்பட்டு பக்கம் வர

எடம் போனா வலம் போற
வலம் போனா எடம் போற
வெக்கத்த விட்டுச் சொல்லுறேன்
மக்கரோ மக்கர் பண்ணுறே

ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா
மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா

பாத்தாலும் பாத்தேன் ஆத்தாடி ஆத்தா
சத்தியமா உன்னப் போல பாத்ததில்லையடி
காத்தாடும் ரோசா கொத்தோடு முள்ளு
குத்தாம பூ எடுக்க முடியவில்லையடி
முடியவில்லையடி ஹேய்

பொண்ணுன்னா உங்களுக்கு
ரொம்ப ரொம்ப எளப்பமா
பொம்பளைங்க பொழப்பெல்லாம்
நீங்க பண்ணுற கொழப்பம்தான்

கருத்திருந்தாலும் ரொம்ப
உருத்து உள்ளவன் நான்
என்ன வெறுத்தொதுக்குறியே
ரொம்ப முறுக்கு காட்டுறியே

ஆஹ ஆஹ ஆஹ ஆஹா
எதுக்கெடுத்தாலும் கண்ண வெட்டி
முழிக்கிறியே எட்டிக் கையப் புடிக்கிறியே
தொட்டு கட்டி இழுக்குறியே

இழுத்தரைக்குற மஞ்சளப் போல்
நீ மனச வெக்குறியே
இடுப்பில் கட்டின கொசுவ சேலையில்
பின்னி முடிக்கிறியே

முறுக்கி நிக்கிற கருப்பு மீசையில்
கன்னத்தக் குத்துறியே
அரிசி குத்துற சாக்குல
துள்ளுற இடுப்பொடிக்கிறியே

வேணுமின்னே உசுப்பி விட்டு
வேடிக்க பாக்குற ராசாத்தி
உள்ளுக்குள்ள ஒண்ணு
வெளியில ஓண்ணு வேணாண்டி..(பொண்ணுன்னா)

வீட்டில் இருந்தாலும்
அது விட்டு வெளியிலதான்
இந்தக் கன்னிப் பொண்ணு மனசும்
அட கண்ட படி சுத்துது

ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ
காட்டில் இருந்தாலும்
நம்ம வீட்டுக்குள்ள உன்னத்தான்
சுத்திச் சுத்தி வருகுதடி இந்த சொங்கிப் பய மனசு

சட்டி கழுவுறேன் சாதம் வடிக்கிறேன்
வேல நடக்கலியே
கோழி அடிக்கிறேன் கொழம்பு வெக்கிறேன்
வாசம் அடிக்கலியே

சமஞ்சு நிக்கிற தங்கம் இருக்கயில்
சமச்சதென்னத்துக்கு
வாலிபப் பசிக்கு வட்டியில் சோறுதான்
காட்டுவதென்னத்துக்கு

சாடையா நான் புரிஞ்சுக்கிட்டேன்
தெரிஞ்சுக்கிட்டேன் பார்வையில
அங்கும் இங்கும் கிள்ளுறியே ராசாவே
ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.