Ola Kudisaiyile Naan Lyrics
ஓலக் குடிசையிலே நான் பாடல் வரிகள்
Last Updated: Jan 29, 2023
ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்
வானத்த தான் எம் மனசு வட்டம் இடுது
நான் வாழும் கூட்டுக்குள்ளே தனிச்சிருந்தாலும்
விண்மீன்கள் கூட்டத்தோட மனசு சுத்துது
இல்லை என்றால் துன்பம் இல்லை
செல்வம் என்றால் இன்பம் இல்லை
என்றும் உள்ள செல்வம் மனசு தானே
ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்
பூங்குருவி தாலாட்டும் புல்வெளி சிரிக்கும்
பொன் வெயில் மஞ்சளை தூவிப் பார்க்குமே
தேனருவி நீரோட்டம் மான் போல் குதிக்கும்
நீரலை பாடிடும் ஜதிகள் கேட்குமே
மழை மேகத்து முத்தம் பயிர்கள் ஆடும் ஆட்டம்
காற்றின் கைகள் பட்டால் அங்கே ஆனந்தம்
வானம்பாடிகள் கூட்டம் நடுவில் வண்ணத் தோட்டம்
காணக் காண நெஞ்சில் என்றும் ஆனந்தம்
சித்திரம் போல் மண்ணில் அழகு
எத்தனை எத்தனை மானே
அத்தனையும் பார்த்தால் இங்கு வேறென்ன வேண்டும்
ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்
தங்க வீணை ஆனாலும் தானாய்ப் பாடாது
மீட்டவும் கேட்கவும் ஒருவன் வேண்டுமே
ராகம் நூறு இருந்தாலும் தானாய் கேட்காது
ராகங்கள் தெரிந்தவன் ஒருவன் வேண்டுமே
இசையாலே மயங்காத மனம்தான் உலகில் ஏது
இருண்ட மனதின் உள்ளே இசையும் நுழையாது
என் பாடல் செல்லாத இடம்தான் உலகில் ஏது
அதை தொடர்ந்து நீயும் செல்ல முடியாது
அந்தி வானில் திங்கள் போல தென்றல் போல ஆடு
உள்ளம் சொல்லும் உண்மை கீதம் என்றென்றும் பாடு (ஓலக்)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.