கன்னி வண்ணம் பாடல் வரிகள்

Last Updated: Apr 09, 2026

Movie Name
Auto Raja (1982) (ஆட்டோ ராஜா)
Music
Shankar-Ganesh
Year
1982
Singers
S. P. Balasubrahmanyam, Vani Jayaram
Lyrics
Pulamaipithan
ஆ: கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
மலர்களுன் வடிவிலே மாநாடு கூட்டுமோ

பெ: ஆ ஆ.. தோகை மேனி கொய்யாப்பூ தொட்ட கைகள் தாழம்பூ
தோகை மேனி கொய்யாப்பூ தொட்ட கைகள் தாழம்பூ
தொடுவதே மலரிதழ் புண்ணாக வேண்டுமோ
தோகை மேனி கொய்யாப்பூ தொட்ட கைகள் தாழம்பூ

ஆ: மலரிதழில் சிறு பனித்துளிகள் முத்தாரம் கொடுக்கின்றன
மையல் தரும் கைகள் மாணிக்க கழுத்தோடு சூட்ட
பெ: மலையருவி தமிழ் கவியருகில் வாழ்த்துக்கள் இசைக்கின்றது
வாழ்த்தும் இசைக்காற்றும் கல்யாண திருநாளைக்காட்ட
ஆ: மன்மதனின் அம்புகளை தாங்காமல் தூங்காமல் தள்ளாடும் காலம் எது... ஆஆ...

ஆ: கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
பெ: தொடுவதே மலரிதழ் புண்ணாக வேண்டுமோ
தோகை மேனி கொய்யாப்பூ தொட்ட கைகள் தாழம்பூ

ஆ: முகவரியில் என் முகவரிகள் நான் கொஞ்சம் வரைந்தாலென்ன
மாலை இந்த வேளை சந்திக்க கடிதங்கள் தீட்டு
பெ: இலை மறைவாய் அதை எழுதிவிடு யாருக்கும் தெரியாமலே
நீயும் மடல் போடு நாம் கூடும் இடம் தன்னைக்கேட்டு
ஆ: தூரிகையும் தாரிகையும் பூமேனி தாங்காது என் கையில் என்னாவது... ஆ ஆ...

பெ: தோகை மேனி கொய்யாப்பூ தொட்ட கைகள் தாழம்பூ
தோகை மேனி கொய்யாப்பூ தொட்ட கைகள் தாழம்பூ
ஆ: ஆஆ... மலர்களுன் வடிவிலே மாநாடு கூட்டுமோ

இருவர்: லாலா லாலா லாலாலா லாலா லாலா லாலாலா
லாலா லாலா லாலாலா லாலா லாலா லாலாலா

Male: Kanni vannam rojaa poo kangal rendum oodhaa poo
Kanni vannam rojaa poo kangal rendum oodhaa poo
Malargal un vadivilae maanaadu koottumo

Female: Aa aa.. Thogai maeni koyyaa poo thotta kaigal thaazham poo
Thogai maeni koyyaa poo thotta kaigal thaazham poo
Thoduvadhae malar idhazh punnaaga vaendumo
Thogai maeni koyyaa poo thotta kaigal thaazham poo

Male: Malar idhazhil siru panithuligal muthaaram kodukkindrana
Maiyal tharum kaigal maanikka kazhuthodu sootta
Female: Malai aruvi thamizh kavi arugil vaazhthukkal isaikkindradhu
Vaazhthum isaikkaatrum kalyaana thirunaalai kaatta
Male: Manmadhanin ambugalai thaangaamal thoongaamal thallaadum kaalam edhu... aa aa...

Male: Kanni vannam rojaa poo kangal rendum oodhaa poo
Kanni vannam rojaa poo kangal rendum oodhaa poo
Female: Thoduvadhae malar idhazh punnaaga vaendumo
Thogai maeni koyyaa poo thotta kaigal thaazham poo

Male: Mugavariyil en mugavarigal naan konjam varainthaalenna
Maalai indha vaelai sandhikka kadidhangal theettu
Female: Ilai maraivaai adhai ezhudhi vidu yaarkkum theriyaamalae
Neeyum madal podu naam koodum idam thannaikkeettu
Male: Thoorigaiyum thaarigaiyum poomaeni thaangaadhu en kaiyil ennaavadhu... aa aa...

Female: Thogai maeni koyyaa poo thotta kaigal thaazham poo
Thogai maeni koyyaa poo thotta kaigal thaazham poo
Male: Aa aa... Malargal un vadivilae maanaadu koottumo

Both: Laala laala laalaalaa laala laala laalaalaa
Laala laala laalaalaa laala laala laalaalaa