ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது பாடல் வரிகள்

Movie Name
Sattam Oru Vilaiyattu (1987) (சட்டம் ஒரு விளையாட்டு)
Music
M. S. Viswanathan
Year
1987
Singers
S. P. Balasubramaniam, Vani Jayaram
Lyrics
Pulamaipithan

ஆண் : ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது
அதில் எங்கள் மனம் இன்ப தேனானது
பெண் : ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது
அதில் எங்கள் மனம் இன்ப தேனானது

ஆண் : இது சுகம் தரும் ஒரு பாச ராகம்
பெண் : இது யுக யுகமென வாழும் வேதம்
ஆண் : இது சுகம் தரும் ஒரு பாச ராகம்
பெண் : இது யுக யுகமென வாழும் வேதம்

இருவரும் : ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது
அதில் எங்கள் மனம் இன்ப தேனானது
அதில் எங்கள் மனம் இன்ப தேனானது

பெண் : ஒரு பிள்ளை சூரியன் ஒரு பிள்ளை சந்திரன்
எப்போதும் ஒளி காணலாம்
ஆண் : நலமாக வாழவும் வரலாறு காணவும்
இரு பேரும் வழிக் காட்டலாம்

பெண் : ஒரு பிள்ளை சூரியன் ஒரு பிள்ளை சந்திரன்
எப்போதும் ஒளி காணலாம்
ஆண் : நலமாக வாழவும் வரலாறு காணவும்
இரு பேரும் வழிக் காட்டலாம்

பெண் : நாடாளும் ராஜாங்கம் நமதாகலாம்
ஆண் : நம் பிள்ளை இரு பேரும் முடி சூடலாம்
பெண் : நாடாளும் ராஜாங்கம் நமதாகலாம்
ஆண் : நம் பிள்ளை இரு பேரும் முடி சூடலாம்

பெண் : ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது
ஆண் : அதில் எங்கள் மனம் இன்ப தேனானது
இருவரும் : ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது
அதில் எங்கள் மனம் இன்ப தேனானது

பெண் : ஆகாய கங்கையும் ஆனந்த சொர்க்கமும்
தாய் தந்தை என வந்ததா
தெய்வங்கள் என்பதா திருக்கோயில் என்பதா
அவையென்ன சமமாகுமா
பால் வார்த்த தாய் நெஞ்சில் பால் வார்க்கலாம்
பேர் தந்த தந்தைக்கு பேர் சூட்டலாம்

இருவரும் : ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது
அதில் எங்கள் மனம் இன்ப தேனானது

ஆண் : சபையேறும் நாள்களில்
இரு பிள்ளை தோள்களில் மலையாக மாலை விழும்
பெண் : அதைக் காணும் வேளையில்
இரு ஜோடி கண்களில் நதியாக கண்ணீர் விழும்

ஆண் : அப்போது நரை கூட நிறம் மாறலாம்
சதையோடும் நரம்போடும் உரம் ஏறலாம்

இருவரும் : ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது
அதில் எங்கள் மனம் இன்ப தேனானது
ஆண் : இது சுகம் தரும் ஒரு பாச ராகம்
பெண் : இது யுக யுகமென வாழும் வேதம்

இருவரும் : ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது
அதில் எங்கள் மனம் இன்ப தேனானது
அதில் எங்கள் மனம் இன்ப தேனானது....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.