போடு தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா பாடல் வரிகள்

Movie Name
Athaimadi Methaiadi (1989) (அத்தைமடி மெத்தைமடி)
Music
S. R. Vasu
Year
1989
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Pulamaipithan
போடு தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா
உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா
ஆஹா தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா
உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா

பாட்டுக்குன்னு பொறந்தவன் நான் போடா டேய்
நம்ம கிட்ட எதிர்த்து நிக்க வாராதே
தெறம இருந்தா பதிலை சொல்லு சவாலு
இல்லையின்னா போட்டுக்குங்க சலாமு

ஆஹா தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா
உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா..வாங்கடா டோய்

கொஞ்சம் பாரு எம்.ஜி.ஆரு
ஆட்டமெல்லாம் நானாடுவேன்
ஹோய் சூரக்கோட்ட சிங்கம் போல
நடிச்சு கூட நான் காட்டுவேன்...ஹோய்...
சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்து ஸ்டலை காட்டணுமா
காதல் ராசன் கமலஹாசன் ஆட்டம் பாக்கணுமா

சகலகலாவல்லவன் நான் துள்ளாதே
சாமி உங்க கைவரிசை செல்லாதே
சகலகலாவல்லவன் நான் துள்ளாதே
சாமி உங்க கைவரிசை செல்லாதே
போடு தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா
உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா..

படிப்பும் வேணாம் பட்டம் வேணாம்
பாட்டில் போதும் இந்தா புடி
பாட்டில் தண்ணி புடிக்கலேன்னா
பாவமில்ல கஞ்சா அடி
போதி மரத்தில் ஞானம் அடைஞ்சான் புத்தன் அந்நாளிலே
போதை மருந்தில் ஞானம் அடையும் பசங்க இந்நாளிலே

தெருத் தெருவா அலையுதடா இப்போது
இதுகளெல்லாம் திருந்துறது எப்போது கர்மம்
தெருத் தெருவா அலையுதடா இப்போது
இதுகளெல்லாம் திருந்துறது எப்போது

போடு தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா
உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா
பாட்டுக்குன்னு பொறந்தவன் நான் போடா டேய்
நம்ம கிட்ட எதிர்த்து நிக்க வாராதே
தெறம இருந்தா பதிலை சொல்லு சவாலு
இல்லையின்னா போட்டுக்குங்க சலாமு

போடு தெம்மாங்கு டண்டணக்கா டன்டனாக்கா
உங்க பம்மாத்து டண்டணக்கா டன்டனாக்கா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.