ஓ மை டியர் லுக் மீ ஹியர் பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Athaimadi Methaiadi (1989) (அத்தைமடி மெத்தைமடி)
Music
S. R. Vasu
Year
1989
Singers
S. P. Sailaja
Lyrics
Vaali
ஓ மை டியர் லுக் மீ ஹியர்
எல்லோ ப்ளவர் லவ்லி பிகர்
என்னாளுமே நான் தான் பூவல்லவோ
என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ

ஓ மை டியர் லுக் மீ ஹியர்
எல்லோ ப்ளவர் லவ்லி பிகர்....

மேடை தோறும் இவள் நடமாட்டம்தான்
மாலை வேளை தினம் அரங்கேற்றம் தான்
ஆடை பாதி இவள் உடல் கொண்டது
ஆசை கோடி இள மனம் கொண்டது

பூமேனியல்ல பொன் வீணை என்று
யார் வந்து இங்கே....யார் வந்து இங்கே......
இருளில் எனை மீட்டினாரோ
என்னாளுமே நான் தான் பூவல்லவோ
என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ

ஓ மை டியர் லுக் மீ ஹியர்
எல்லோ ப்ளவர் லவ்லி பிகர்....

பூவும் பெண்ணும் ஒரு இனமல்லவா
பெண்மை மென்மை அதன் மணமல்லவா
மெல்ல அள்ள வரும் உறவல்லவா
கிள்ள வில்ல அது பகையல்லவா

சொல்லாமல் வந்து சுகம் கொண்டதாரோ
யாரென்று இங்கே....யாரென்று இங்கே......
யார்தான் சொல்வாரோ
என்னாளுமே நான் தான் பூவல்லவோ
என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ

ஓ மை டியர் லுக் மீ ஹியர்
எல்லோ ப்ளவர் லவ்லி பிகர்
என்னாளுமே நான் தான் பூவல்லவோ
என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.