ஆராரோ ஆரிரரோ நீ யாரோ தாய் யாரோ பாடல் வரிகள்

Movie Name
Athaimadi Methaiadi (1989) (அத்தைமடி மெத்தைமடி)
Music
S. R. Vasu
Year
1989
Singers
Vani Jayaram
Lyrics
Pulamaipithan
ஆராரோ ஆரிரரோ நீ யாரோ தாய் யாரோ
இதில் உண்மையை யார் அறிவாரோ

பாலூட்ட தாயில்லையா உன்
தாய்ப் போல நானில்லையா
பாலூட்ட தாயில்லையா உன்
தாய்ப் போல நானில்லையா

நெஞ்சில் இடம் மாறி விளையாடும் தென்றலே
தேய்ப்பிறை ஏதும் அறியாத திங்களே அன்பு
பாலூட்ட தாயில்லையா உன்
தாய்ப் போல நானில்லையா

ஈரைந்து மாதங்கள் தாங்கி மடி தாங்கி
இடை நோக மேல் மூச்சு வாங்கி தினம் வாங்கி
ஒரு தாய்க்கு மகளாக வந்தாய் இங்கு
மறு தாய்க்கு மகவாகி நின்றாய் இங்கு
மறு தாய்க்கு மகவாகி நின்றாய் உனக்கு
பாலூட்ட தாயில்லையா உன்
தாய்ப் போல நானில்லையா

ஒரு நாய்க்கும் தாயாகும் உள்ளம் அன்பு வெள்ளம்
கருணைக்கு பொருள் என்ன சொல்லும் இவள் இல்லம்
தாய்மைக்கு கிடையாது பேதம் என்றும்
அதுதானே தரமான வேதம் என்றும்
அதுதானே தரமான வேதம் உனக்கு
பாலூட்ட தாயில்லையா உன்
தாய்ப் போல நானில்லையா...

ஒரு பேரு நீ பெற்ற பேரு அரும் பேரு உன்
தாய் தந்தை இவரென்று கூறு வேறு யாரு
எடுத்தாலும் வளர்த்தாலும் தாய்தான் நீ
என்றென்றும் இவளன்பு சேய்தான் நீ
என்றென்றும் இவளன்பு சேய்தான் உனக்கு
பாலூட்ட தாயில்லையா உன்
தாய்ப் போல நானில்லையா

நெஞ்சில் இடம் மாறி விளையாடும் தென்றலே
தேய்ப்பிறை ஏதும் அறியாத திங்களே உனக்கு
பாலூட்ட தாயில்லையா உன்
தாய்ப் போல நானில்லையா....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.