ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடல் வரிகள்

Movie Name
Kumari Kottam (1971) (குமரிக்கோட்டம்)
Music
M. S. Viswanathan
Year
1971
Singers
L. R. Eswari
Lyrics
Pulamaipithan
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
இரண்டும் இருந்தால் அழகு வளரும்
இன்றுபோல் என்றும் கொண்டாடும்
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
இரண்டும் இருந்தால் அழகு வளரும்
இன்றுபோல் என்றும் கொண்டாடும்

மூங்கில்போல் வளையும் இடையும்
தூண்டில்போல் கவரும் இதழும்
மூங்கில்போல் வளையும் இடையும்
தூண்டில்போல் கவரும் இதழும்
தூண்டினால் துள்ளாத உள்ளங்கள்
கொண்டாட்டம் போதாதோ
ஆடையோ அரையும் குறையும்
ஆசையோ அதிகம் வளரும்
ஆடையோ அரையும் குறையும்
ஆசையோ அதிகம் வளரும்
ஜாடையோ தித்திக்க தித்திக்க
திட்டங்கள் போதாதோ

ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
ஆடுவது உடலுக்கு விளையாட்டு

ஓரத்தில் ஒதுங்கும் உடையும்
ஓசையில் ஒடுங்கும் நடையும்
ஓரத்தில் ஒதுங்கும் உடையும்
ஓசையில் ஒடுங்கும் நடையும்
பார்த்த பின் பெண்ணோடு ஒன்றாக
பஞ்சாங்கம் பார்ப்பாரோ
மாதத்தில் ஒருநாள் நிலவு
உலகத்தில் இதுதான் அழகு
மாதத்தில் ஒருநாள் நிலவு
உலகத்தில் இதுதான் அழகு
போட்டியில் நேருக்கு நேராக
யார் இங்கு வருவாரோ

ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
ஆடுவது உடலுக்கு விளையாட்டு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.